தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, January 16, 2014

இறந்த பின் நமது உடலை சொந்தம் கொண்டாடுபவர் யார் யார் பட்டினத்தார் சொல்கிறார்!


எரி எனக்கென்னும் – புழுவோ எனக்கென்னும் – இந்த மண்ணும்

சரி எனக்கென்னும் – பருந்தோ எனக்கென்னும் – தான் புசிக்க

நரி எனக்கென்னும் – புன்னாய் எனக்கென்னும் – இந்நாறுடலைப்

பிரியமுடன் வளர்த்தேன் – இதனால் என்ன பேறு எனக்கே?




எரியும் நரியும், புழுவும் பருந்தும் நாயும் சொந்தம் கொண்டாடப் போகும் இந்த உடலை நாம் எப்படி எல்லாம் போற்றி வாசனைத் திரவியங்கள் – அழகிய ஆடைகள் – சுவையான உணவுகள் கொடுத்துப் பேணிக் கொண்டிருக்கிறோம். நற்செயல்களைப் புறந்தள்ளி ஆடை அலங்காரத்தில் நகைநட்டில் கவனம் செலுத்துகிறோம். அறச்செயல்களை விரும்புவதில்லை நாம். சிந்தித்துப் பார்க்க வேண்டிய கருத்துகள்

No comments:

Post a Comment