தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, January 29, 2014

பிறன் மனை நாடுபவர்களுக்கு




மற்றான் மனைவியை நோட்டம் விடும் ஆண்கள், அவர்களது மனைவியோ, தாயோ, தங்கையோ, மகளோ இதே போல மற்றொரு ஆணையோ அல்லது இவர்களை மற்றொரு ஆணோ நோட்டம் விட்டால் நிலைமை எவ்வளவு விபரீதம் ஆகும் என்று.

அதை நம் மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் பிறன் மனை நாடுபவர்களுக்கு, மனதை விட்டு என்றும் நீங்காத வடுவுடன், சூடு போடும் வகையில் ஒரு கதை சொல்கிறார்கள்.

ராமாயணத்தில் இருந்து ஒரு சிறு பகுதி…

சீதையை கடத்திக் கொண்டு வந்து இலங்கையில் வைத்திருந்த ராவணன் சீதையை அடைய என்ன உபாயம் என்று சிந்தித்தான். ஒரு யோசனை தோன்றியது. ராமனைப் போல் உருமாறி, சீதை இருக்குமிடம் சென்றான். மிகவும் பிரியத்துடன் சீதை அருகில் சென்று, “”சகியே! உன் நாதன் வந்து விட்டேன், இன்னும் ஏன் கவலை?” என்றவன், அவளருகே வந்து அணைத்துக் கொண்டான்.

சீதையும் அவனை அணைத்தவாறு புன்னகை புரிந்தாள். ராவணன் திகைத்தான். “எந்தச் சூழலிலும் ராமனை சரியாக அடையாளம் காணும் சீதை இவளா இப்படி!’ என்று யோசித்த வேளையில், அவள் உடலில் இருந்து துர்நாற்றம் வீசியது.

“”ஆகா! இவள் சீதையல்ல! தூரத்தில் நின்றாலே, அவளது உடலிலிருந்து சுகந்த வாசனை அல்லவா வீசும்! இது துர்நாற்றமாயிருக்கிறதே!” அவன் அவளை உதறிவிட்டு, தன் உருவத்தை வரவழைத்துக் கொண்டு “”யார் நீ?” என்றான். அவளும் உருமாறினாள்.

அப்போது அங்கு நின்றது சூர்ப்பனகை. (ராவணனின் அருமை தங்கை)

“அண்ணா! நீயா! நான் ராமனை அடையும் ஆசையில், சீதையைப் போல், என் உருவத்தை மாற்றிக்கொண்டு இங்கு நின்றேன்! உன்னை ராமன் என நினைத்து நெருங்கினேன்,” என்று அவமானத்தால் தலை குனிந்து சொன்னாள்.

எனவே, பிறன் மனை நோக்கும் எண்ணத்தை கைவிட்டு, ராமனைப் போல வாழ வேண்டும் என்கிறது புராணங்கள்.

No comments:

Post a Comment