தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, January 14, 2014

‘சரஸ்வதி மூலிகை’ வல்லாரை!!!

மூலிகைகள் என்ற இயற்கைக் கொடையை ஏராளமாகப் பெற்றிருக்கிறோம். நம்மைச் சுற்றி சாதாரணமாகக் காணப்படும் தாவரங்கள், அசாதாரண மருத்துவ குணங்களைக் கொண்டவை.
அந்த வரிசையில் வரும் வல்லாரை வழங்கும் நன்மைகள் அனேகம்.
வாழிடம்
வல்லாரை (Centella asiatica) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய தாவரமாகும். ஆசியா, ஆவுஸ்திரேலியா போன்ற பகுதிகளுக்கு உரியதாகும்.
மேலும் இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தாவரம். இதன் இலைப்பகுதிகள் உணவாகப் பயன்படுவதால் இத்தாவரம், கீரையினங்களுள் அடங்கும்.
வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது. மேலும் இதனை சரஸ்வதிக் கீரை என்றும் அழைக்கின்றனர்.
வல்லாரையில் இருவகை உண்டு
சமவெளி வல்லாரை – வெளிர் பச்சை நிற இலைகளுடையது.
மலைப்பகுதிகளில் வளரும் வல்லாரை: கரும்பச்சை இலைகளுடையது. இதில் மலைப் பகுதிகளில் வளரும் வல்லாரைக்கு வீரியம் அதிகம் என்று நம்பப்படுகிறது.
வல்லாரை கீரையின் ச‌த்துக்க‌ள்
இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து’சி’ மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.
இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது.
இந்தக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. பொதுவாக இது உணவாகப் பயன்படுவதைவிட மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம்.
வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும். சீன மற்றும் திபெத்திய மருத்துவ முறைகளிலும் வல்லாரைக்கு தனிஇடம் உண்டு.
வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள்
இரத்த சுத்திகரிப்பு வேலையைச் செவ்வனே செய்யும். உடல்புண்களை ஆற்றும், வல்லமைக் கொண்டது.
தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி குறைய உதவுகிறது, உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது.
மனித ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது.
இதனைக் கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும். நரம்பு தளர்ச்சியை குணமாகி, மூளைச் சோர்வை (Mental fatique) நீக்கி சிந்திக்கும் திறனை அதிகரிக்கும்.
அஜீரணக் கோளாறுகளை குறைக்கும். கண் மங்கலை சரி செய்யும், சீத பேதியை நிறுத்தும்.
இது தவிர நாள்பட்ட எக்சிமா, பால்வினை நோய்கள் வெண்குஷ்டம் போன்ற பல நோய்களுக்கும் வல்லாரை அருமருந்தாக விளங்குகிறது. பிரசவத்திற்கு பின் தாயின் உடல்நிலை தேறுவதற்கு வல்லாரை இலைகளை இடித்து சாறெடுத்து, பனங்கற்கண்டோடு சேர்த்து கொடுக்கும் வழக்கம் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் உள்ளது.
சொறி, சிரங்கு, மாரடைப்பு, மாலைக்கண், நீரிழிவு, காக்கை வலிப்பு, காய்ச்சல், பைத்தியம் போன்ற நோய்களையும் வல்லாரை குணப்படுத்துகின்றது.
வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை அகலும்.
வல்லாரைக் கீரை பொதுவாக மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியை வளர்க்கிறது.
நரம்புத் தளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. இருதய பலத்துக்கும், தாது விருத்திக்கும் உதவுகின்றது.குடல் புண், காமாலை, தொழுநோய், வாதநோய், நீரிழிவு, சளி, சிறுநீர் தகராறு, யானைக்கால் நோய், காய்ச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.
வல்லாரையின் சில எளிய வைத்தியங்கள்
இரத்த சோகை (Anaemia)
1/2 தேக்கரண்டி வல்லாரை இலைச்சாறுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து 1 மாதம் அருந்தவும்.
பார்வை மங்கல், உடற்சோர்வு, நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைவு
வல்லாரை இலைகளை காயவைத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். தினமும் 1/4 தேக்கரண்டி சூரணத்தை தேன் அல்லது பசும்பாலோடு சேர்த்து அருந்தவும்.
ஆறாத புண்கள், எக்சிமா, சோரியாசிஸ்
வல்லாரை இலையை பசும் நெய்யோடு சேர்த்து கொதிக்க வைத்து ஆறிய பின் மேலே தடவும்.
தூக்கமின்மை
1/2 தேக்கரண்டி வல்லாரை பொடியை 1 கப் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் படுக்கும் முன் குடிக்கவும்.
ஞாபகமறதி
5 வல்லாரை இலைகளை இடித்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி தேனோடு சேர்த்து தினமும் உண்ணவும்.
அதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளைப் பறித்து நன்றாக மென்று தின்று அடுத்த நான்கு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் இருந்தால், எந்த விதமான அச்சம், பயம் போன்ற பல வகையான மனநோய்களும் விலகும்.
தினமும் நான்கு வல்லாரை இலையுடன் இரண்டு பாதாம் பருப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் வலிமை பெறும். இனிமையான குரல் வளம் உண்டாகும்.
வல்லாரை இலை 4, அக்ரூட் பருப்பு 1, பாதாம் பருப்பு 1, ஏலக்காய் 3, மிளகு 3 ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து கொஞ்சம் கற்கண்டோடு அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், கடுமையான இதய நோய்கள் குணமாகும்.
வல்லாரைச் சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் கலந்து சாப்பிட்டால் சளி, கபம், இருமல் போன்றவை விலகும்.
வல்லாரைச் சாறில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து எடுத்துப் பொடியாக்கி, தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் சரியாகும்.
வல்லாரை இலை, பொடுதலைக் கீரை இரண்டையும் நிழலில் தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி, சம அளவு எடுத்து ஒன்றாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும்.

No comments:

Post a Comment