தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, January 24, 2014

கிழங்கு வகைகளின் மருத்துவ குணங்கள் !!


மனிதனுக்கு எண்ணற்ற மருத்துவ பலன்களை அள்ளித்தருகிறது கிழங்குகள்.
சத்துக்குறைவான உணவை உண்பதால் ஏற்படும் சோகை போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கு உதவுகின்றன.
கருணைக் கிழங்கு
அஜீரணத்தை அகற்றி நல்ல பசியை உண்டாக்கும். மற்றும் வாதசூலை, குன்மநோய், கிருமிகள், வாதம், பித்தம் போன்றவற்றால் ஏற்படும் நோய்களைப் போக்கும்.
தாமரைக் கிழங்கு
கண்களின் தோன்றும் குறைபாடுகளைப் போக்கப் பயன்படுகிறது. தவளைச்சொறி, உடல்வலி, பித்தத்தினால் ஏற்படும் மயக்கம் போன்றவற்றையும் குணப்படுத்த வல்லது.
முள்ளங்கிக் கிழங்கு
இருமல், ஜலதோஷம், தலைவலி, கபம், சுவாசக் கோளாறு, குன்மம், பல்நோய், மூலக்கடுப்பு போன்ற குறைபாடுகளை குணமாக்கும்.
பனங்கிழங்கு
பித்தமேகம், அஸ்திசூடு, ஆகியவற்றை நன்கு குணமாக்கும். உடல் குளிர்ச்சி உண்டாக்கும்.



No comments:

Post a Comment