தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, January 30, 2014

நம் கண் முன்னாலேயே அழிக்கப்படும் நமது வரலாறு!!


நம் கண் முன்னாலேயே நமது வரலாறு மட்டுமல்ல நாம் கேட்டு வளர்ந்த இதிகாச புராணங்கள் மாற்றப்படுகின்றன!அவற்றை நம்மிடையே உள்ள கோடரிக்காம்புகளே பணத்துக்காக செய்கின்றன!இதற்காகத்தான் அவை வர்ணம்,ஜாதிகளை சாடி மக்கள் மனங்களில் தப்பான எண்ணங்களை உருவாக்கின!இப்போது ஊடகங்கள் மூலம் சிறப்பாக தம் பணியை செய்கின்றன!

இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழின அழிப்பில் இவை ஈடுபடுவதால் இவர்களுக்கு பணம் வழங்குவோருக்கு ஆதாயம் உண்டு,ஆனால் புராண,இதிகாசங்களை மாற்றுவதால் தெலுங்கனுக்கோ மலையாளிக்கோ கன்னடனுக்கோ மற்ற இந்தியருக்கோ இழப்பே அன்றி ஆதாயமில்லை!இவர்கள் எல்லாம் இஸ்ரேலில் தோன்றி நம்முள் ஊடுருவியவருக்காக இந்திய அனைத்து வரலாறுகளையும் அழிக்க இப்படி செய்வது வெள்ளிடைமலை!ஆனால் மக்கள் உணராமல் இது புராணம்,இதிகாசம்,இதனால் நமக்கென்ன என்பது பக்கத்து வீடு பற்றி எரிய வேடிக்கை பார்ப்பதாகும்!நாளை நமக்கு!இவற்றை அழிக்கையிலேயே தமிழனின் பாதி வரலாறு அழிந்துவிடும்!காரணம் நம்மவரால்த்தான் சைவ,வைணவம் போன்ற இந்து மதங்கள் இமயம் வரை பரப்பப்பட்டன!கடாரம்வரை காவப்பட்டன!இன்று இந்தோனேசியா,பிலீப்பைன்ஸ்,தாய்லாந்தில் இருக்கும் ஆலயங்கள் தமிழரால் கட்டப்பட்டவை!புரிகின்றதா!நம்மை அழிப்பதும் இந்துமதத்தை அழிப்பதும் வேறல்ல!

சிவம்,மகாபாரதம்,இராமாயணம் போன்ற தொடர்கள் அதை மிக சிறப்பாக செய்கின்றன!அங்கு பல சம்பவங்கள்,உறவு முறைகள் தவறாக அமைக்கப்பட்டு வருங்கால சந்ததிக்கு கொடுக்கப்பட சிறப்பாக வழிசெய்துள்ளார்கள் நம் எதிரிகள்!இப்போதே அந்நிய நாடுகளில் வாழும் தமிழர் சிலபல சலுகைகளுக்காக மதம் மாறுவதுடன் பிள்ளைகளுக்கு தமிழறிவை கொடுப்பதும் கேள்வியாக உள்ளது!இன்னும் இரு சந்ததியுடன் அவர்கள் அன்னியராகவே ஆகிடுவர்!சிலவேளை நம் வரலாறை அவர்கள் அறிய முற்பட்டால் இவைதான் கிடைக்கும்!அதனால் நம் வரலாறு முற்றாக அழிந்துவிடும்!

உதாரணமாக சிவம் தொடரில் பிள்ளையார் அண்ணன் முருகன்(திருப்புகழில் கறையானைக்கிளையோனே கதிர்காமப்பெருமாளே என்று உள்ளது) மகாபாராதத்தில் வாரணாவதத்தில் சதியை விதுரர் மூலம் அறிந்த பீமன் மற்றவர்கள் தூக்கத்தில் இருக்க மாளிகையை தானே கொளுத்திவிட்டு விதுரரால் இரகசியமாக அமைப்பிக்கப்பட்ட சுரங்கவழியால் குடும்பத்தை சுமந்து காட்டுவழியாக தப்பிக்கின்றான்?இங்கோ !!!!!

எனவே உண்மைத்தமிழரே தெலுங்கரின் புரட்சிப்பாதையில் மயங்கிக்கிடந்தது போதும்,உங்கள் இனத்தை காக்க இன்று நீங்கள் எழா விட்டால் உங்கள் சந்ததியும் அழிவது நிச்சயம்!

விஜய் தொலைக்காட்சியும் ஒரு எதிரியின் ஊடகமே!அது உங்களை அழிக்கும் வரை ஓயாது!

புரிந்தால் தமிழராக மானத்துடன் வாழ்வீர்!
இல்லையேல் அனைத்துமிழந்து அழிந்தே போவீர்!!
உங்கள் கையில் உங்கள் வாழ்வு!
தட்டி எழுப்புவதே என் கடமை!
சாவதும் வாழ்வதும் உங்கள் சுதந்திரம்!

No comments:

Post a Comment