தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 29 ஜனவரி, 2014

சூரியன்!


நம் தலைவர் ஒரு சூப்பர் ஸ்டார். சாரி, ஒரு மீடியம் ஸ்டார். வயது 500 கோடி ஆண்டுகள். இன்னும் 700 கோடி ஆண்டுகள் உயிருடன் இருக்கலாம்.

நம் பூமியை விட 13 லட்சம் மடங்கு பெரியவர். குடும்பத்தின் மொத்த எடையை 100 சதவீதம் என்று வைத்துக் கொண்டால், இவர் எடை மட்டுமே அதில் 99 சதவீதம். நாம் எல்லோரும் சேர்ந்து 1 சதவீதம் தான்.

நாம் அவரின் 8 நிமிடத்திற்கு முந்தைய தோற்றத்தையே பார்க்கிறோம். 9.3 கோடி மைல் தூரத்தில் தான் இருக்கிறார்.

இவர் முகத்தில் ஏகப்பட்ட கரும்புள்ளிகள் உள்ளன. Fair & Lovely போடச் சொல்வோமா?

சூரியரின் முகத்தில் காணப்படும் புள்ளிகளின் எண்ணிக்கை வருடத்துக்கு வருடம் மாறுகின்றது. அதில் ஒரு ஒழுங்கும் இருக்கிறது. 11 வருடங்களுக்கு ஒரு முறை உச்ச நிலையை அடைந்து ஏறத்தாழ புள்ளிகளே இல்லாத நிலையை அடைகிறது. புள்ளிகள் 11 வருடங்களுக்கு ஒரு முறை குறுகிய கால மாற்றங்களுடன் நீண்ட காலத்திற்கு ஒரு முறை மெதுவான மாற்றம் அடைவதாய் நம்பப் படுகிறது. இதன் காரணத்தை நீங்கள் கண்டுபிடித்தால் அரசியல் செல்வாக்கு இல்லாமலே டாக்டர் பட்டம் கிடைக்கும்.

நம் தலைவரின் மேற்புற உஷ்ணம் 6000 டிகிரி கெல்வின். சில இடங்களில் 4500 டிகிரி கெல்வின். இந்த குறைந்த உஷ்ணம் வெளிப்படுத்தும் இடமே கரும்புள்ளி.

இப்புள்ளிகளில் சிறியது 1500 கி.மீ. குறுக்களவும். பெரியது 100000 கி.மீ. குறுக்களவும் ஆகும்.

சூரியனின் மத்திய பாகம் 25 நாட்களுக்கு ஒரு முறையும் துருவ பாகம் 34 நாட்களுக்கு ஒரு முறையும் தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது. இதனால் காந்த சக்தி திருகிக் கொண்டு மேற்பரப்பு உஷ்ணம் பாதிக்கப்படுகிறது. இதனாலேயே புள்ளிகள் தோன்றுகிறது.

விண்வெளியில் வரும் காஸ்மிக் கதிர்கள் நம் நைட்ரஜனைத் தாக்கும் போது கார்பன் - 14 தோன்றுகிறது. கரும்புள்ளி ஏற்படுகையில் காந்த சக்தி அதிகமாவதால் காஸ்மிக் கதிர்கள் திசை திரும்பி விடுகிறது. இதனால் கார்பன் - 14 குறைவதால் தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன. நமது ரேடியோ தொடர்பு சாதனங்களும் தான். வலிப்பு, மனநோயும் நமக்கு ஏற்படலாம்.

தினமும் நம்து சூரியனார் சாப்பிடும் உணவு 39,744 டன் ஹைட்ரஜன் அணுக்கள்.



ஒரு முக்கிய நபரை பற்றி சில தகவல்கள் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக