தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 21 ஜனவரி, 2014

நந்திதேவரால் ராவணனுக்கு வந்த அழிவு


மூன்று லோகத்தையும் வெற்றி கொண்டு அகந்தையில் திளைத்திருந்த ராவணன் தன் புஷ்பக விமானத்தில் ஒருமுறை கயிலாய மலையின் மேல் பறந்து சென்று கொண்டிருந்தான். அப்போது அவனைத் தடுத்த நந்திதேவர் ராவணனிடம், ``இது கைலாய மலை. 

இங்கே சிவபெருமான் வாசம் செய்கிறார். அதனால் நீ மலையின் இடமாகப் போ!'' என்று எச்சரித்தார். அதைக் கேட்ட ராவணன், நந்தியை `குரங்கு போன்ற முகத்தை வைத்துக் கொண்டு எனக்கு அறிவுரை கூறுகிறாயா?' என்று நந்திதேவரை ஏளனம் செய்தான். 

அதுகேட்ட நந்திதேவர், ``என்னைக் குரங்கென்று கூறிய உன் நாடும் குலமும் குரங்குகளால் அழியும்'' என்று சாபமிட்டார். பிற்காலத்தில் அனுமன் உள்ளிட்ட வானரங்களால் இலங்கை அழிந்தது. அத்தகைய ஆற்றல் படைத்தவர் நந்தி பெருமான். 

சிவநிந்தனையைப் பொறுக்காத நந்திதேவரே திரேதாயுகத்தில் ஆஞ்சநேயராகப் பிறந்தார் என்றும் கருதுகிறார்கள். ராமபிரானின் தூதுவனாகத் தன் முன்னே வந்து நின்ற அனுமனைப் பார்த்து, ராவணனுக்கு `இம்முகத்தை இதற்கு முன் எங்கோ பார்த்திருக்கிறோமே' என்ற சந்தேகம் வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஆக நந்திதேவரே அனுமனாகப் பிறந்தார் என்பது கருத்து.
http://www.maalaimalar.com/2014/01/21155007/nandi-Ravana-war.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக