தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, January 15, 2014

உலகத் தமிழர் அனைவருக்கும் மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள்!


தமிழர்களை காட்டிலும் விலங்குகளை நேசித்த இனம் உலகில் வேறு எந்த இனமும் இல்லை என்பதற்கு இந்த மாட்டுப் பொங்கல் திருவிழாவே நல்லதொரு சான்றாகும். மயிலுக்கு போர்வை வழங்கிய வள்ளலும் , முல்லைக்கு தேர் கொடுத்த வள்ளலும் நம் தமிழினத்தை சேர்ந்தவர்கள் தான். அந்த அளவிற்கு இயற்கையை போற்றி பாதுகாத்து வந்துள்ளனர் தமிழர்கள் . மாடுகளையும் காளைகளையும் தங்கள் குடும்ப உறுப்பினர் போல பாவிக்கும் தமிழர்களை காட்டுமிராண்டிகளாக சித்தரிக்க முயல்கின்றனர் சிலர்.

ஏறுதழுவுதல் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்பதற்கு பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி மாடுகளுக்கு நாம் அநீதி விளைவிக்கிறோம் என்று பொய்க் கதை புனைகின்றனர் மாடுகளுக்கு சற்றும் சம்பந்தமே இல்லாத மேதாவிகள். மாட்டை தொட்டுக் கூட பார்க்காத இவர்கள் விலங்கின ஆர்வலர்கலாம் . மாட்டோடு பின்னி பிணைந்து உறவு பேணும் தமிழர்கள் காட்டுமிராண்டிகலாம். என்ன ஒரு கொடுமை இது!

மாட்டை தன்வீட்டு செல்லக் குழந்தை போல் பராமரித்து வளர்த்து வரும் தமிழர்களுக்கு அறிவுரை சொல்லும் தகுதி எவருக்கும் இல்லை. உலகில் மாடுகளுக்கு நன்றி செலுத்தி ஒரு திருவிழா எடுக்கும் ஒரே இனம் நம் தமிழினம் என்பதில் பெருமை கொள்வோம் . மாட்டுப் பொங்கலை இனிதே கொண்டாடுவோம். மகிழ்வோம்
 —

No comments:

Post a Comment