இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்ட
தஞ்சைப் பெருவுடையார் கோயில்
அல்லது பிரகதீசுவரர் கோயில்
அல்லது தஞ்சை பெரிய கோயில்
தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக்
கோயிலும் உலகப் பாரம்பரியச்
சின்னமும் ஆகும்.
இக்கோயில், 10 ஆம்
நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச
நிலையிலிருந்தபோது,
கருவூர்ச் சித்தரால் வடிவமைக்கப்பட்டு,
இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது.
ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும்,
பின்னர்,
தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில்,
தஞ்சைப் பெருவுடையார் கோயில்
என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில்,
17,18 ஆம் நூற்றாண்டுகளில்
மராட்டிய மன்னர்களால்
ஆளப்பட்டபோது பிருகதீசுவரம்
ஆகியது. தஞ்சைப் பெரியகோவில்
எனவும் இக்கோவில்
அறியப்படுகிறது.
இக்கோயில் கட்டப்பட்டபோதிருந்த
காலம், சோழராட்சியின்
பொற்காலமாகும்.
தமிழ்நாடு முழுவதும் ஒரே குடைக்கீழ்
இருந்ததுடன், எல்லைக்கப்பாலும் பல
இடங்கள் சோழப் பேரரசின் கீழ்
இருந்ததுடன், பெருமளவு வருவாயும்
கிடைத்துவந்தது.
பெருமளவு ஆள்பலமும், அரசனின்
சிவபக்தியோடு கூடிய ஆளுமையும்,
கருவூர்ச் சித்தரின் வழிகாட்டலுமே இத்தகையதொரு பிரம்மாண்டமான
கோயிலை சுமார் 7 ஆண்டுகளில்
கட்டிமுடிப்பதற்குத்
துணையாக இருந்தது.
இன்று தமிழகத்தின் மிக முக்கியமான
சுற்றுலாத்தலமாக விளங்கும்
இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள்
கல்வி, அறிவியல்,
பண்பாட்டு நிறுவனத்தால் உலக
பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
1003ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம்
ஆண்டு முடிக்கப்பட்ட இந்த
கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000
வயது பூர்த்தியானது
தஞ்சைப் பெருவுடையார் கோயில்
அல்லது பிரகதீசுவரர் கோயில்
அல்லது தஞ்சை பெரிய கோயில்
தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக்
கோயிலும் உலகப் பாரம்பரியச்
சின்னமும் ஆகும்.
இக்கோயில், 10 ஆம்
நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச
நிலையிலிருந்தபோது,
கருவூர்ச் சித்தரால் வடிவமைக்கப்பட்டு,
இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது.
ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும்,
பின்னர்,
தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில்,
தஞ்சைப் பெருவுடையார் கோயில்
என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில்,
17,18 ஆம் நூற்றாண்டுகளில்
மராட்டிய மன்னர்களால்
ஆளப்பட்டபோது பிருகதீசுவரம்
ஆகியது. தஞ்சைப் பெரியகோவில்
எனவும் இக்கோவில்
அறியப்படுகிறது.
இக்கோயில் கட்டப்பட்டபோதிருந்த
காலம், சோழராட்சியின்
பொற்காலமாகும்.
தமிழ்நாடு முழுவதும் ஒரே குடைக்கீழ்
இருந்ததுடன், எல்லைக்கப்பாலும் பல
இடங்கள் சோழப் பேரரசின் கீழ்
இருந்ததுடன், பெருமளவு வருவாயும்
கிடைத்துவந்தது.
பெருமளவு ஆள்பலமும், அரசனின்
சிவபக்தியோடு கூடிய ஆளுமையும்,
கருவூர்ச் சித்தரின் வழிகாட்டலுமே இத்தகையதொரு பிரம்மாண்டமான
கோயிலை சுமார் 7 ஆண்டுகளில்
கட்டிமுடிப்பதற்குத்
துணையாக இருந்தது.
இன்று தமிழகத்தின் மிக முக்கியமான
சுற்றுலாத்தலமாக விளங்கும்
இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள்
கல்வி, அறிவியல்,
பண்பாட்டு நிறுவனத்தால் உலக
பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
1003ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம்
ஆண்டு முடிக்கப்பட்ட இந்த
கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000
வயது பூர்த்தியானது
உலகின் அதிசயம் எனக் கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல், ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர்.
இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது, இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது. இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது.
ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது ! (AUG 8TH 1173 -1372)
தஞ்சையில் உள்ள சித்தர்களின் கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜா ராஜா சோழனால் கட்டப்பட 216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது. இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் (80,000 கிலோ) எடை கொண்டது.
உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 ஆண்டுகளுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம். இப்போதுள்ள எந்தத் தொழில் நுட்பமும் இல்லாத அந்தக் காலத்தில் எப்படி கட்டப்பட்டது? என்பது உலகுக்கே வியப்பாக உள்ளது.
ஆனால். சாகாக்கலை அறிந்த சித்தர்களுக்கு இது மிகச் சாதாரண வேலை. 64 கலைகளையும் தாண்டி, 65வது கலையாகிய சாகாக்கலை/ மரணமில்லா பெருவாழ்வு பெற்ற சித்தர்கள் பிரபஞ்சத்தையே மாற்றி அமைக்கும் சக்தி வாய்ந்தவர்களென சித்தர் ஏடுகள் கூறுகின்றன. இது நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் அவர்கள் விட்டுச்சென்ற பல கலைகள் / தடயங்கள் நம்மை இன்றும் வியக்கவே வைக்கின்றன.
வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள தஞ்சை பெரிய கோயில் போன்ற கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை! சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ள, தமிழனின் பெருமைகளை பற்றி மறந்து விடுகின்றோம்!
தகவலுதவி & நன்றி:
சசிதரன்
தஞ்சை பெரிய கோவிலின் நேர்முகத் தோற்றம்...
1858ம் வருடத்தில் நந்தி மண்டபத்தின் மேலிருந்து எடுக்கபபட்ட அரிய புகைப்படம்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக