தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

அயோத்தி தாசர் !


அயோத்தி தாசர் (மே 20, 1845 - 1914; தமிழ்நாடு) தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி , சமூக சேவகர், தமிழ் அறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். தலித் இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் இவர் ஒருவர். தலித் பின்புலத்தில் இருந்து வந்த இவர், 19 நூற்றாண்டின் இறுதியில் தலித் மக்களின் முன்றேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவரமாக செயற்பட்டார். அவரது இயற்பெயர் காத்தவராயன்.

பெரும் கல்விப்புலம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர் , இவருடைய தாத்தா பட்லர் கந்தப்பன் அவர்கள்தான் பிரதிகள் அழிந்து நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளை தன் குடும்ப சேமிப்பு ஏடுகளில் இருந்து மீட்டு எல்லிஸ் துரையிடம் வழங்கியவர் , அதன்பின் திருக்குறள் இன்றைய அச்சு வடிவுக்கு வந்தது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக