அகத்திய மாமுனி:: ஞானம் 13
குருவாக உமைபாக னெனக்குத் தந்த
கூறரிய ஞானமது பத்தின் மூன்று
பொருளாகச் சொல்லி விட்டேனப்பா நீதான்
பொருளறிந்தாற் பூரணமும் பொருந்திக் காணே
அருளாகா திந்நூலைப் பழித்த பேர்கள்
அருநரகிற் பிசாசெனவே அடைந்து வாழ்வார்
அருளாக ஆராய்ந்து பார்க்கும் பேர்கள்
ஆகாயம் நின்றநிலை அறியலாமே.
துரியம் சேர்...
குண்டலினி சக்தியை பூசை பண்ணு..
கருநெல்லி அமிர்தத்தை நீயும் சுவை..
ஓமென்ற ரீங்காரம் புருவ மையம் ...
மற்றொன்றும் பூசையல்ல மகனே! சொன்னேன்;
அ .. உ ..ம ... ஓம் என்னும் மந்திரத்தை உன்னிப்பாய் பார்த்து பற்றி ஏறு...
பதிமூன்று பாடல்களில் சிவன் அருளியதை சொல்லி விட்டேன்..
இதை அறிந்து பரவெளி காண்பீர்..
திருமந்திரம் :: உபதேசம்::
அளித்தான் உலகெங்குந் தானான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்
அளித்தான்பே ரின்பத் தருள்வெளி தானே.
அவனே அனைத்தும் என்னும் உண்மை அறிவை அருளினான்...
அமரகளும் தேவர்களும் அறியமுடியாத உலகத்தை அறியும் அறிவை அளித்தான்..
அவனே திருநடனம் ஆடும் இடத்தையும் அளித்து... பரவெளியின் பேரின்பத்தை அளித்து அருளினானே!
https://www.facebook.com/pages/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/116665631702510
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக