தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 13 ஏப்ரல், 2013

மருத்துநீர்!!


மருத்துநீர்
*********
தாழம்பூ, தாது மாதுளம்பூ, தாமரைப்பூ, துளசி, வில்வம், அறுகு, பால், கோமயம், கோசலம், கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம், மஞ்சள், சுக்கு, திப்பிலி ஆகியவற்றை சுத்தமான நீரில் இட்டுக்காச்சிய கஷாயமாகும். பூவகை கிடைக்காவிடின் அவைகளின் இலை, பட்டை, வேர், கிழங்கு ஏதாவது உபயோகிக்கலாம்.இந்த இரு பஞ்சாக கால நிர்ணய புண்ணிய காலங்களில் ஏதாவது ஒன்றில் சகலரும் சங்கற்பபூர்வமாக மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருத்துநீரை பெரியோர்கள், தாய், தந்தையர்களைக் கொண்டு தேய்ப்பித்தல் வேண்டும்.தலையில் கொன்றை இலையும், காலில் புங்கமிலையும் வைத்து கிழக்கு அல்லது வடக்கு புறமாக பார்த்து நின்று தேய்ப்பித்து அதன் பின்னர் ஸ்ஞானம் செய்தல் சிறப்புத் தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக