தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 27 ஏப்ரல், 2013

வேலூரின் தங்கக் கோயிலை பார்த்திருக்கிறீர்களா?


வேலூரின் தங்கக் கோயிலை பார்த்திருக்கிறீர்களா?

நம்ம வேலூர் நகரில் தங்கக் கோயில் ஒன்று இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?..

ஸ்ரீபுரம் தங்கக்கோயில், வேலூர்

கண்டிப்பாக பார்க்க வேண்டியவை

ஸ்ரீபுரம் தங்கக்கோயில் எனும் இந்த பிரசித்தமான ஆன்மீகத்தலம் வேலூர் நகரத்தில் மாலைக்கொடி எனும் இடத்தில் உள்ளது. மஹாலட்சுமிக்காக எழுப்பப்பட்டிருக்கும் இந்த கோயில் முழுதும் தங்க முலாம் பூசப்பட்டதாக காட்சியளிக்கிறது.

எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு காணப்படும் 15 தங்க அடுக்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோயிலில் சித்தரிக்கப்பட்டுள்ள அம்சங்கள் வேத சாரங்களை பிரதிபலிப்பதாக சொல்லப்படுகிறது.
இக்கோயிலுக்கு விஜயம் செய்யும் பயணிகள் கடுமையான உடை விதிமுறைகளை பின்பற்ற வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அரைக்காற்சட்டை, மிடி போன்ற உடைகள் இங்கு தவிர்க்கப்படவேண்டியவையாகும். மேலும், மொபைல் போன்கள், கேமராக்கள் மற்றும் இதர எலக்ட்ரானிக் பொருட்களும் இங்கு தடை செய்யப்பட்டிருக்கின்றன.
புகையிலை மற்றும் மது போன்ற லாகிரி வஸ்துகளின் உபயோகமும் தவிர்க்கப்படவேண்டிய ஒன்றாகும். காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை வருடம் முழுவதும் இக்கோயில் பக்தர்களுக்காக திறக்கப்படுகிறது. காலை 4 மணி முதல் 8 மணி வரை அபிஷேகமும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஆரத்தி சேவையும் நடத்தப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக