ஏன் சித்திரை ஒன்றை தமிழ் புத்தாண்டாய் கொண்டாடி வருகிறோம் ?.. கடந்த சில வருடங்களாக இதற்கு சர்ச்சைகளையும் கிழப்பி வருகிறோம் . இருக்கிறது இதற்கு சரியான விளக்கம் ... நாம் வாழும் பூமி , பால்வெளி திரளில் சூரிய குடும்பத்தில் ஒரு கோள் அவ்வளவுதான் .. இந்த சூரிய குடும்பத்தை ஆட்சி செய்பவன் சூரிய பகவான் . நம் முன்னோர்க்கு முன்னோர்கூட இயற்க்கை வழிபாட்டைத்தான் மேற்கொண்டு இருந்தார்கள் . அதிலும் சூரிய வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது . இது இந்துக்கள் மட்டுமல்ல , இஸ்லாம் மதத்துக்காரர்கள் பிறை நிலவை வழிபட்டநேர், கிருஸ்துவர்கள் நச்சத்திரத்தை வழிபட்டநேர் . இப்படி எல்லோருக்கு மாதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் வழிபாடு இயற்கையை நோக்கியதாக தான் இருந்தது . இப்படிப்பட்ட நிலையில் இந்த உலகையே ஒளியுட்டி கொண்டு இருக்கும் சூரிய பகவான் . இந்த சித்திரை மாதத்தில்தான் மிகவும் பலம் வாய்ந்தவராக வலம் வருகிறார் . அதனால்தால் வெயில் சுட்டெரிக்கிறது . இந்த சூரிய பகவன் பலம் வாய்ந்த மாதமான சித்திரை மாதத்தில் இருந்தே நம் மாதம் கணக்கிடப்படுகிறது . ஏன் இந்த சித்திரை மதத்திற்கு சித்திரை என்று பெயர் வந்தது தெரியுமா ? .. இந்த சித்திரை மாதம் சூரியன் உச்சத்தில் மாதம் , இந்த மாதத்தில் சந்திரனும் பலம் பெரும் நாள் பௌர்ணமி . இந்த பௌர்ணமி துலாம் ராசி கட்டத்தில் உள்ள சித்திரை நச்சத்திரத்தில் சந்திர பகவான் வரும்போது நிகழ்வதால் இம்மாதத்திற்கு இப்பெயர் வந்தது . இந்த நாளில் சூரியனும் சந்திரனும் உச்ச பலத்தை எட்டுவதால் , இந்த சித்திரை நட்ச்சதிரத்தை கொண்டே இந்த சித்திரை மாதத்தை முதல் மாதமாக கொண்டாடி வருகிறோம் . நன்றி .
( சித்திரை என்பது சமஸ்கிருத சொல் என்று யாரும் விவாதத்திற்கு வர வேண்டாம் . வட சொல் பயன் பாடு தொல்காப்பியர் காலத்தில் இருந்தே இருக்கிறது
வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தோடு புணர்ந்த சொல்லா கும்மே ( தொல். சொல் . 395 )
சிதைந்து வரினும் இயைந்தன வரையார் ( தொல் . சொல் 396 )
சிதைந்து வருவனவற்றை என்று கொள்ளலாம் என்கிறார் . )
இவன் ===> கவிஞர்.செந்தமிழ் தாசன் ( பாடலாசிரியர் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக