வணக்கம் நண்பர்களே..!
வலைப்பூ ஆரம்பிப்பதன் மூலம் அதில் உங்களுடைய ஆக்கங்களை எழுதி உலகறியச் செய்யலாம்.
வலைப்பூவின் மூலம் கணிசமான வருவாயை ஈட்ட முடியும்(Earn Money through Blog). உங்களுடைய ஈடுபாடு, உழைப்பை ஆகியவற்றைக் கொண்டு முழுநேர வலைப்பதிவராக மாறி அதன்மூலம் அதிக பணம் ஈட்டக்கூடிய வழிமுறைகளும் உண்டு. தேவை பொறுமை மட்டுமே. உடனடியாக வலைப்பூ ஆரம்பித்து, உடனடியாக அதிக பணம் சம்பாதிக்க முடியுமா என்றால் சற்று கடினமே.!
காரணம், வலைப்பதிவு என்பது மற்ற தொழில்களைப் போல் அல்ல..மற்ற தொழில்களில் முதலீடு செய்த உடனேயே சம்பாதிக்க முடியும். வலைப்பூவில் அப்படியல்ல.. தொடர்ந்து நீங்கள் ஒரு ஆறுமாத காலமாவது எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் வலைப்பதிவில் வெற்றிப்பெற வேண்டுமானால் உண்மையாக, கடுமையாக உழைக்க வேண்டும்.
உங்களுடைய சொந்த ஆக்கங்களை எழுத வேண்டும் (Own writing). மற்றவர்களுடைய ஆக்கங்களை நகலெடுத்து பதிவதோ, உள்ளடங்களை மாற்றி எழுதுவதோ பயன்தராது. வருடம் முன்னூற்றி அறுபத்தைந்து நாட்களும் தவறாமல் பதிவிட வேண்டும். நீங்கள் எழுதும் பதிவுகள் பலருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
உங்களுடைய சொந்த ஆக்கங்களை எழுத வேண்டும் (Own writing). மற்றவர்களுடைய ஆக்கங்களை நகலெடுத்து பதிவதோ, உள்ளடங்களை மாற்றி எழுதுவதோ பயன்தராது. வருடம் முன்னூற்றி அறுபத்தைந்து நாட்களும் தவறாமல் பதிவிட வேண்டும். நீங்கள் எழுதும் பதிவுகள் பலருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
உங்களுடைய வலைப்பதிவு மற்றவர்களுடையதிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்க வேண்டும்.(Different from others blog) நீங்கள் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் (Blog Key Words முக்கியமானது. வலைப்பதிவிற்கு தொடர்புடைய பதிவுகள் எழுதுவதே சிறந்தது.
மேலதிக விவரங்களுக்கு என்னைத்தொடர்பு கொள்ளுங்கள்.
வலைப்பூ தொடங்க விருப்பமா?
இணையத்தில் தற்போதைய சூழலில் எத்தனையோ இணையதளங்கள் (Free Blog Websites) இலவச வலைப்பூக்கள் அமைத்துக்கொள்ளும் வசதியை கொடுக்கின்றன. அவற்றில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் வலைப்பூ ஒன்றை ஆரம்பித்துக்கொள்ளலாம். அவற்றில் முக்கியமான இரண்டு (நிறுவனங்கள் Two important Blogging Platforms) வலைத்தளங்கள் மிகச்சிறந்த சேவையை வழங்குகின்றன. இத்தளங்களே உலக மக்களிடையே பெரும்பாலும் வரவேற்பைப் பெற்றுக்கொண்டுள்ளது.
- ஒன்று: பிளாக்கர் தளம்
- இரண்டு: வேர்ட்ப்ரஸ் தளம்
பிளாக்கர்.காம்:
முற்றிலும் இலவசம். எளிதாக வலைப்பூ உருவாக்கலாம். எளிமையான பயனர் இடைமுகம். யார் வேண்டுமானாலும் வலைப்பூ அமைத்துக் கொள்ளலாம். வலைப்பூ அமைக்க உங்களிடம் ஒரு மின்னஞ்சல் முகவரி, இணையம் (Internet), கணினி (Computer) இருந்தால் மட்டும் போதுமானது.பிளாக்கர் |
வலைப்பூ அமைக்க பிளாக்கர் தளத்தை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
பிரபலமான வலைத்தளம் கூகிள்(Google). கூகிள் எண்ணற்ற இலவச வசதிகளை வழங்குகிறது. அவற்றில் மிக முக்கியமான வசதிதான் பிளாக்கர்.
பிளாக்கர் தளத்தில் வலைப்பூ அமைக்க நீங்கள் எந்த ஒரு கணினி மொழியும் கற்றிருக்கத் தேவையில்லை. அதாவது இணையதளம், வலைப்பூ ஆகியவற்றை நடத்த சர்வர் சைட் ஸ்கிரிப்ட் என்று சொல்லக்கூடிய PHP, ASP .net, வலைத்தள வடிவமைக்க நிரல்கள் எழுதி அவற்றை இயக்கத் தெரிந்திருக்க வேண்டியதில்லை.
சாதாரணமாக புதியவர் ஒருவர் ஒரு பிளாக்கர் பிளாக் தொடங்க ஐந்து முதல் பத்து நிமிடங்களே போதுமானது.
நீங்கள் பிளாக்கரில் வலைப்பூ தொடங்கினால் www.blogname.blogspot.com என அந்த வலைப்பூ முகவரி இருக்கும்.
இதில் உங்களுக்கான டொமைன் பெயர் வாங்கிக்கொண்டால் ரூபாய் 600 (தற்போதைய மதிப்பு) செலவாகும். இவற்றைச் செய்வதன் மூலம் உங்களுடைய வலைப்பூவை தனிப்பயனாக்க முடியும்.
இவ்வாறு நீங்கள் டொமைன் பெயரை பெற்றுக்கொண்டால் www.domainname.comஎன வலைப்பூவின் முகவரி மாறிவிடும்.
இந்த வசதியை பிளாக்கர் தளமே வழங்குகிறது.
பிளாக்கர் தளம் வடிவமைப்பு:
பிளாக்கர் தளத்தை வடிவமைக்க வார்ப்புருக்கள் பயன்படுகிறது. பிளாக்கர் தளத்திலேயே இயல்பாக இருக்கும் வார்ப்புருக்களைப் பயன்படுத்தலாம். இது பார்ப்பதற்கு எளிமையான தோற்றத்தில் இருக்கும்.
அவற்றைத் தவிர மற்ற மூன்றாம் நபர்கள் வடிவமைத்த வார்ப்புருக்களையும் (Third Party Templates) பயன்படுத்தலாம். ஆனால் அவற்றைப் பயன்படுத்தும்பொழுது வேண்டிய மாற்றங்களை நாம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நாம் விரும்பிய தோற்றத்தைப் பெற முடியும்.
பிளாக்கர் தளங்களை நானும் கூட வடிவமைக்கிறேன். ஏற்கனவே இருக்கும் பிளாக்கர் தளங்களையும் தற்காலத்திற்கு தகுந்தாற்போன்று ஒரு முழுமையான (வெப்சைட் லுக்) வலைத்தளமாக மாற்றிக் கொடுக்கிறேன். மேலதிக தகவல்களுக்கு என்னை நீங்கள் தொடர்புகொள்ளலாம்.
பிளாக்கர் தளங்களை நானும் கூட வடிவமைக்கிறேன். ஏற்கனவே இருக்கும் பிளாக்கர் தளங்களையும் தற்காலத்திற்கு தகுந்தாற்போன்று ஒரு முழுமையான (வெப்சைட் லுக்) வலைத்தளமாக மாற்றிக் கொடுக்கிறேன். மேலதிக தகவல்களுக்கு என்னை நீங்கள் தொடர்புகொள்ளலாம்.
வலைப்பதிவர்கள் செய்யும் தவறு:
சாதாரணமானவர்கள் வலைப்பூவை தொடங்கிவிடுகிறார்கள். அதில் தம் விருப்பம்போல் பதிவுகளை எழுதிக்கொண்டே வருகின்றனர். ஆனால் அதிக ஹிட்ஸ் கிடைக்கவே இல்லை என்று வருத்தப்படுகின்றனர். சிலர் பொழுதுபோக்காக எழுதுகின்றனர். சிலர் வலைப்பூவின் மூலம் கணிசமான பணம் சம்பாதிக்க முடியும் என நம்பி எழுதுகின்றனர். ஆனால் அவர்கள் அதில் வெற்றிப்பெறுவதில்லை.
என்ன காரணம்?
என்ன காரணம் என்று பார்த்தால், உண்மையிலேயே அவர்கள் செய்யும் சில தவறுகள் மற்றும் வலைப்பதிவை தேடல் இயந்திரத்திற்கு தகுந்தவாறு உவப்பாக்கம் (SEO Optimization) செய்யாதது தான்.
இதுபற்றிய கூடுதல் தகவல்களை நீங்கள் அறிந்துகொள்ள நீங்கள் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புகொள்ளலாம். அல்லது என்னுடைய அலைபேசி எண்ணுக்கு அழைக்கலாம்.
வேர்ட்பிரஸ்:
வியாபாரம் மற்றும் தொழில் தொடர்பான வலைத்தளங்கள் அமைக்க வேர்ட் பிரஸ் பயன்படும். இவற்றைப் பயன்படுத்தி அடிப்படை விஷயங்கள் கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டும். நிரல்வரிகளை பயன்படுத்துவதைப் பற்றிய அடிப்படை அறிவு இருக்க வேண்டும்.
வேர்ட்ப்ரஸ் |
இது முற்றிலும் Php அடிப்படையாக கொண்டு இயங்குகிறது.
வேர்ட்ப்ரஸ் தளமும் இலவச வலைப்பூக்கள் அமைத்துக்கொள்ள வழிவகை செய்கிறது. பிளாக்கர் தளத்துடன் வேர்ட் ப்ரஸ் இலவச தளத்தை ஒப்பிடும்பொழுது புதியவர்களுகு பிளாக்கர் தளமே சிறந்தது என்று சொல்லலாம்.
புரோகிராம் எழுத தெரிந்தவர்கள், பெரிய பெரிய நிறுவனங்களின் வெப்சைட்கள் அமைப்பவர்கள் என பலரும் வேர்ட்ப்ரசையேப் பயன்படுத்துகின்றனர்.
ஆக, தொழில்முறை தொடர்பான வலைத்தளங்கள் அமைக்க வேர்ட்ப்ரஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இத்தளத்தில் நீங்கள் இலவச வலைப்பூ ஆரம்பித்தால் அதனுடைய முகவரிwww.blogname.wordpress.com என இருக்கும்.
டொமைன் மற்றும் ஹோஸ்டிக் பெற்றுக்கொண்டால் www.blogname.com என மாறிவிடும்.
வேர்ட் ப்ரஸ் பயன்படுத்தி டொமைன் ஹோஸ்டிங் மற்றும் வெப் டிசைன் செய்ய தொடக்க கட்டணம் ரூபாய் 10000 ஆகும். இதுபற்றிய போதுமான தகவல்களைப் பெறவும் நீங்கள் என்னைத் தொடர்புகொள்ளலாம்.
குறிப்பு: நீங்கள் முற்றிலும் இணையத்திற்கு, வலைப்பூவிற்கு புதியவர் என்றால் உடனடியாக என்னைத் தொடர்புகொண்டு உங்களுக்கான வலைப்பூவை தொடங்கிக்கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக