தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 18 ஏப்ரல், 2013

இந்து சமயத்தின் தத்துவம்;


இந்து சமயத்தின் தத்துவம்;
--------------------------------------
இந்திய உபகண்டத்தின் மிகப் பழைமை வாய்ந்த சமயம் இந்து சமயமாகும். பரந்த கண்ணோட்டமும் பண்பாடும் கொண்டது. கி.மு 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தியது இந்து சமயம் எனக் கூறலாம். மற்றைய சமயங்களைப் போல இந்து சமயத்தை ஆரம்பித்தவர், ஆதியில் போதித்தவர் என எவரையும் குறிப்பிட்டுக் கூற முடியாது.

பக்திநெறியும் கட்டுப்பாடுகளும் சித்தாந்தமும் கொண்ட சமயம் இந்து சமயம். ஆத்மா அழிவற்றது; அரிதான மானிடப் பிறவியில் தெய்வ வழிபாட்டுடன் அறவாழ்வு வாழ்ந்து மறுபிறவித் தொடரிலிருந்து விடுபட்டு இறைவனுடன் இரண்டறக் கலத்தலே இந்து சமயத்தவரின் குறிக்கோளாகும். இந்த உயர்ந்த நிலையை மோட்சம் என்பர்.

இந்து சமயத்திற்கு பெயர்க்காரணம் என்னவென்றால்,இந்து அல்லது ஹிந்து என்ற சொல்லை ஹிம்+து எனப்பிரிக்கலாம். ஹிம் - ஹிம்சையில், து - துக்கிப் பவன் எனப்பொருள்படும். ஓர் உயிர் எந்த காரணத்தினாலாவது வருந்துவதாக இருந்தால், அத்துயரத்தை தனக்கு ஏற்பட்ட துயரமாகக் கருதி அகற்ற முன்வரவேண்டும். அத்தகையவனே இந்து ஆவான். அப்பண்புமிக்க மக்களை கொண்ட மதமே இந்து மதமாகும்.

அன்பே கடவுள். இறைவன் எல்லா உயிர்களிடத்தும் நீங்காமல் வாழ்கிறான். எல்லா உயிர்களின் உடம்பையே அவன் கோயிலாக கொண்டுள்ளான். ஆதலால் எந்த உயிரின் உடலுக்கும் துன்பம் நேராவண்ணம் அவைகளிடம் அன்பு செலுத்தினால் அருள் வடிவமாகிய ஆண்டவனது அருள் பெறலாம் என்பதே இந்து சமயத்தின் தத்துவமாகும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக