தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

மூளைச் சலவையும் முக்கியத்துவமும் !


இந்த உலகத்திலே வசியக் கலை ஆனது ஆரம்ப காலங்களில் இருந்தே பிரபலம் ஆனதொன்று. அதன் ஒரு பகுதியேபேச்சு வசியம் ( மூளைச் சலவை) ஆகும். எந்த ஒரு மனிதனையும் மூளைச் சலவை செய்ய முடியும் என்பதே உண்மை . அதற்கான கால அவகாசம் என்பது அவர்களின் மனவலிமையின் அளவிற்கேற்ப மாறுபடும்.


பல்வேறுபட்ட வசியக் கலையிலே இப்போது பயன்படுத்துவது மூளைச் சலவை என்கிற பேச்சு வசியம் தான் அதிகம். பேச்சாலே ஒருவரின் எண்ண ஓட்டத்தை திசை திருப்புவதன் மூலம் நாம் எண்ணுவதை அவர்கள் எண்ண ஓட்டத்துடன் ஒன்றித்துப் போகச் செய்து விடலாம் .
மெஷ்மர் என்பவர் சில பேச்சு வசியக் கலையை வெளி உலகுக்கு எடுத்துக் காட்டினார். அது மெஷ்மரிசம் என்று அழைக்கப்பட்டது .அதில் ஒரு சில கொள்கைகள் ஏற்கப்படாத பட்சத்தில் பிற்காலத்தில் உருவாகிய ஹிப்னாடிசம் உலகம் எங்கும் பரந்து, பல்வேறு நோய்களில் இருந்து பலரும் விடுபட வித்திட்டது .


ஆரம்ப காலங்களில் பலருக்கும் எண்ணம் இருந்தது இது(ஹிப்னாடிசம்) மனநிலை சரியில்லாதவர்களை மட்டும் மாற்றக் கூடியதொன்று என்று , பின் வந்த காலங்களில் பல்வேறுபட்ட நோய்களிற்கும் இதன் மூலம் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது என்பதே உண்மை .


மேலும்  இந்த மூளைச் சலவை என்பது எல்லா இடங்களிலும் நடக்கிறது. ஆனால் அதனை யாரும் பொருட்படுத்துவதில்லை என்பதே உண்மை . படிக்கும் பாடசாலையில் இருந்து வேலை செய்யும் நிறுவனங்கள் என்று இந்த மூளைச் சலவை ஆனது நடந்து கொண்டு தான் இருக்கிறது .


இராணுவத்தில் இருப்பவர்களிற்கு முக்கியமாக தேவைப்படுவது இந்த மூளைச் சலவை என்பது குறிப்பிடத்தக்கதொன்றாகும் . போரில் வெற்றி பெற ஆள் பலமோ ஆயுத பலமோ மட்டும் காரணமாக இருக்காது என்பதை எந்த ஒரு இராணுவமும் அறிவார்கள். எந்த ஒரு சூழலிலும் செயற்படக் கூடியவாறு அவர்கள் எண்ணப் போக்கானது, இந்த மூளைச் சலவை மூலம் மாற்றப் பட்டிருக்கும்.


இந்த உலகத்திலே செய்யப்படும் மிகப் பெரும் மூளைச் சலவையானது அரசியல்வாதிகளால் செய்யப்படுவதாகும் . மேலும் வளர்ந்து வரும் இன்றைய உலகில் தொலைக்காட்சிகளும் அதனுடன் தொடர்பு பட்டவர்களும் இக் கலையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர் என்பதுவும் மறுப்பதற்கில்லை.


ஒருவரின் துன்பத்தை மாற்றக்கூடிய சக்தி இந்த பேச்சு வசியத்திற்கு உண்டு . அதனை செய்பவர் அவர்களின் நிலை அறிந்து அதற்கேற்ப அவர்களுடன் பேசுவதன் மூலம் குறிப்பிட்ட அந்தத் துன்பங்களில் இருந்து அவர்கள் வெளி வரச் செய்கின்றனர் . சில சமயங்களில் எதிர்பாலினரின் மூளைச் சலவையானது வேகமாக வெற்றியைத் தரக் கூடியதாக அமைந்திருக்கும் .


பல்வேறு நன்மைகளைத் தரக் கூடிய இந்த மூளைச் சலவையினால் தீமைகளும் உண்டு என்பது மறுப்பதற்கில்லை. தவறான வழிகளில் பயன்படுத்தியதன் காரணமால் தான் பல்வேறுபட்ட வசியக் கலைகள் ஆனது கால ஓட்டத்தில் கரைந்து அழிந்து விட்டது .


"நல்லதையே நினைப்போம் நல்லதையே செய்வோம்"



நன்றி
கோகுலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக