தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 24 ஏப்ரல், 2013

சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை


சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்து அன்று பொன் ஒளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே.
-திருமந்திரம் (5)

கற்பனைக்கு எட்டாத பிரபஞ்சங்களையும் கடந்து நின்று அண்டசராசரங்களையும் படைத்து ,காத்து ,அழித்து தன்னுடைய அடியார்களின் உள்ளத்தில் இருந்து அருளும் சிவபெருமானைப்போல் இணை கூறத்தக்கவர் யாரும் இல்லை .


“மைப் படிந்த கண்ணாளும் தானும் கச்சி-மயானத்தான்,
வார்சடையான்” என்னின், அல்லான்;
ஒப்பு உடையன் அல்லன்; ஒருவன் அல்லன்; ஓர்
ஊரன் அல்லன்; ஓர் உவமன் இ(ல்)லி;
அப் படியும் அந் நிறமும் அவ் வண்ண(ம்)மும் அவன்
அருளே கண் ஆகக் காணின் அல்லால்,
“இப் படியன், இந் நிறத்தன், இவ் வண்ணத்தன், இவன்
இறைவன்” என்று எழுதிக் காட்ட ஒணாதே.

-ஆறாம் திருமுறை (அப்பர் ஸ்வாமிகள் )

நமசிவாய சிவாயநம சிவயசிவ சிவசிவ
நமசிவாய சிவாயநம சிவயசிவ சிவசிவ
நமசிவாய சிவாயநம சிவயசிவ சிவசிவ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக