ஏன் புத்தகம் படிக்கவேண்டும்?
--------------------------
உலகிலேயே ஒருவனுக்கு சிறந்த நண்பன் யாரென்றால் நல்ல புத்தகமே ஆகும்.புத்தகம் படிப்பதால் மனம் ஒரு நிலைப்படும்.தன்னம்பிக்கை கிடைக்கும்.கற்பனை திறன் வளரும்.நல்ல எழுத்தாற்றலும், பேச்சாற்றலும்,அறிவாற்றலும்
புத்தகம் படிப்பது என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல -அது மூளையை உற்சாகப்படுத்தும் மருந்து என்பது கண்டறியப்பட்டுள்ளது.படிப்ப
பாட நூல்களைப் படிப்பது மிகையாக மதிப்பெண் பெறுவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால் பொது நூல்கள் வாழ்க்கை முறை மற்றும் ஒழுக்க நெறிகளை நோக்கமாகக் கொண்டது. நல்வாழ்வுக்கு அடித்தளம் அமைப்பது நல்லகுணங்கள். அந்த நற்குணங்களை நம்முள் விதைப்பவை நல்ல நூல்களே ஆகும்.
நல்ல புத்தகம் என்பது எதுவென்றால்,படிக்க எடுத்த பிறகு படித்து முடிக்கும் வரை கீழே வைக்க விடாமல் நமது ஆர்வத்தைத் தூண்டச் செய்கிற புத்தகம் எதுவோ, அதுவே சிறந்த புத்தகம்.ஒரு முறைக்குப் பலமுறை திரும்பத் திரும்ப படிக்கத் தூண்டும் புத்தகம் எதுவோ, அதுவே சிறந்த புத்தகம்.தூங்கச் சென்றவன் தூக்கம் வருவதற்காக புத்தகத்தைப் புரட்டுகிறபோது எந்தப் புத்தகம் அவனைத் தூங்க விடாமல் புரட்டிப் போடு கிறதோ, அதுவே சிறந்த புத்த்கமாகும்.
உலக புத்தக தின வாழ்த்துகளுடன்..,
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக