சிவன் அணிந்துள்ள ஆபரணங்களின் தத்துவம் :
--------------------------
"சிவனுக்கு ஆபரணங்களாக சில பொருட்களை போட்டிருகிறார்களே ,அதன் உண்மை தத்துவம் என்னெவென்று தெரியவில்லை ;ஆகவே நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்று சாதுவிடம் சிலர் கேட்டனர் .
அதற்கு சாதுவானவர் ,"சித்திரத்தில் உள்ள ஒவ்வொரு ஆபரணத்துக்கும் பின்னால் ஒரு தாத்பரியம் உள்ளது.உதாரணமாக ,என்னையே சித்திரமாக நீ வரையும் போது நான் பித்தளை மோதிரம் ஒன்றைக் கையில் அணிந்து கொண்டு விடுகிறேன் .ஓவியத்திலும் என் கையில் இருக்கும் மோதிரத்தை நீ சித்திரித்துக் காட்ட வேண்டும்.அதன் பின் அந்தப் படத்தை வேறு ஒருவரிடம் காட்டும்போது ,சாது கையில் அணிந்திருக்கும் மோதிரம் என்ன மோதிரம் என்று நான் சொல்லாமலே "இது பித்தளை மோதிரம்"என்று அவர் சொல்ல வேண்டும் .உன்னால் முடியுமா ?யோசித்து சொல் என்றார்.
ஓவியர் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார் . "சுவாமி உங்கள் படத்தை என்னவோ நான் சித்திரமாக எழுதிவிடலாம் .ஆனால் நீங்கள் போட்டிருப்பது பித்தளை மோதிரம் என்று உங்கள் படத்தை பார்க்கும் வேறு ஒருவர் உணர்ந்து கொள்ளும்படியாக எப்படி என்னால் எழுத முடியும் . அதுவே அந்த மோதிரம் பித்தளை என்று உணர்த்த என்னால் முடியாது என்றார்.
உன்னால் மட்டும் என்ன உலகத்தில் உள்ள எந்தச் சித்திரக் காரனாலும் சித்திரத்தில் உள்ளவர்கள் போட்டுக் கொண்டிருக்கும் ஆபரணங்கள் இன்ன உலகத்தினால் ஆனது என்று படத்தில் சித்திரிக்கவே முடியாது.
அதை உணர்ந்த சித்த ஓவியர்கள் சிவனுக்கு நாகம் என்ற உலகத்தை ஆபரணமாக அணிவிக்க வேண்டியிருந்தது .அதை எப்படி
உலக மக்கள் எல்லாரும் உணர்ந்து கொள்வது என்று யோசித்து பார்த்ததும் நாகம் என்று தெரிந்து கொள்வதற்காக உயிருள்ள நாகத்தை
உலோக நாகமகச் சித்தரித்தார்கள் என்றார் சாது.
அது சரி சுவாமி ,சிவனின் முடியில் பிறைச் சந்திரனை ஏன் அறிவித்திருக்கிறார்கள் ?என்று ஓவியர் கேட்டார்.
சிவனுக்குச் செம்பினால் ஆன ஒரு ஆபரணத்தை அணிவிக்க வேண்டியிருந்தது .அந்த ஆபரணம் உலோகத்தினால் ஆன செம்புதான் என்று உலகத்தில் மக்கள் உணர வேண்டும்.அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சித்தர்கள் சிந்தித்தார்கள்.தமிழ் அகராதிகளிலும் சித்தாதி நூல்களிலும் செம்புக்கு மதி என்ற சொல் இருப்பதைக் கண்டனர் .செம்பில் களிம்பு என்ற விசமான களங்கம் சேர்ந்திருக்கிறது.அது போலச் சந்திரனிலும் களங்கம் இருப்பதை யாவரும் அறிவார்கள் .ஆகவே தான் செம்பு என்ற பொருள் கொண்ட பிறைச் சந்திரனை ஆபரணமாக அணிவித்தனர். சந்திரனிலும் களங்கம் இருக்கிறதல்லவா.
சிவனது சடா முடியில் கங்கையை சித்திரித்திருக்கிறதன் தாத்பரியம் என்ன தெரியுமா ?பொதுவாக அதைக் கங்கை நீர் என்றுதான்
சொல்வார்கள்.ஆனால் ,மெய்ஞான சித்த ஓவியரின் கருத்து வித்யாசமானது .
சிவன் மிகவும் அபாரமான ஒரு மகா சக்தியைப் பெற்றிருக்கிறார் .அதை உலக மக்கள் நன்று புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் சித்திரத்தின் மூலம் எப்படி விளக்குவது என்று யோசித்தார்கள்.
சக்தி என்பதற்கு பெண் என்றும் ஒரு பொருள் இருக்கிறது .ஆகையினால் அந்தப் பெண்ணை , சக்தியின் அம்சமாக சித்திரத்தில் வரைந்தார்கள் .
கங்கை என்ற பெண்ணின் வாயில் இருந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது .சாதாரண மக்களுடைய கண்களுக்கு அந்தப் பெண்ணின் வாயில் இருந்து தண்ணீர் ஓடி வருவதுதான் தெரிகிறது .
ஆனால்,ஞான சித்தர்களின் கருத்து வேறானது ஆகும் .சிவன் நிலையான சக்தியைப் பெற்றிருக்கிறார் . அந்த சக்தி எங்கும் பிரவாகமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டவே அந்தப் பெண்ணின் வாயில் இறுதி தண்ணீர் பிரவாகமாக வருவதாகச் சித்திரத்தில் சித்தரிக்கிறார்கள் .
இம்மூன்றையும் ஏன் சிவனுடைய சடா முடியில் சித்தரித்து இருக்கிறார்கள் என்றால் ,சிவன் மூன்று பொருட்களைக் ஒரு சக்தியைப் பெற்றிக்கிறார் .அச் சக்திகளை எப்படி ஒன்றுடன் ஒன்று இணைத்தார். என்பதை உலகோருக்கு உணர்த்த வேண்டுமே என்று ஞான சித்த ஓவியர்கள் சிந்தித்து சடா முடி இந்த மூன்று பொருட்களையும் இணைக்கிறது என்பதைக் காட்டவே இவ்வாறு சடாமுடியில் மதி கங்கை என்ற பெண் அவள்வாயில் இருந்து வரும் தண்ணீர் ஆகிய மூன்றையும் இணைத்து சித்தரித்தார்கள் .
இவ்வாறு ஓவியருக்கு சாதுவானவர் விளக்கம் கூறி முடித்தார்.
- என். தம்மண்ண செட்டியார் எழுதிய அணு விஞ்ஞானமும் மெய் ஞானமும் நூலிலிருந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக