தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 18 ஏப்ரல், 2013

5 வயதில் குழந்தை பெற்ற சிறுமி : நம்பினால் நம்புங்கள்.!


5 வயதில் குழந்தை பெற்ற சிறுமி : நம்பினால் நம்புங்கள்.!
============================

உலகை மிரளவைக்கும் சம்பவங்களை தரும் ஒரே ஒரு இணையத்தளமான தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் நீங்கள் ஏரானமாக வினோதங்களை சந்தித்திருப்பீர்கள். இன்று சந்திக்கப்போவதும் மிரளவைக்கும் ஒரு சம்பவம்தான். வரலாற்றை ஒரு முறை திரும்பிப்பார்த்த போது அங்கு ஏராளமான அமானுசியங்களும் விசித்திரங்களும் நிரம்பிக்கிடக்கின்றன. இவ்வாறு வரலாற்றுத்தடம் பதித்து மருத்துவ உலகை மிரளவைத்த ஒரு சம்பவத்தினை இன்று நாம் உங்களுக்காக தருகிறோம். பெருவியன் நாட்டைச்சேர்ந்த ஒரு லீனா மெடீனா எனும் பெண் குழந்தை கருவுற்று குழந்தை பெற்றமையே இந்த செய்தி. குறித்த இச்சம்பவம் மே மாதம் 14 ம் நாள் 1939 ம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.

குழந்தை பெற்ற 5 வயது சிறுமி
விக்கிபீடியாவின் தரவுகளின் அடிப்படையின் இச்சம்பவம் இடம்பெறும் போது சிறுமிக்கு 5 வயதும் 7 மாதங்களும் 21 நாட்களுமாக கணக்கிடப்பட்டுள்ளது. குழந்தை 5 வயதாக இருக்கும் போது வயிற்றில் கட்டிதான் வளர்வதாக நினைத்து மருத்துவமனையை அணுகியுள்ளார்கள் பெற்றோர்கள். அங்கு லீனாவை சோதித்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி. குழந்தை 7மாதக்கர்ப்பமாக இருந்தது. பூப்பெய்த வேண்டிய வயதில் ஒரு குழந்தை 7 மாதக்கர்ப்பமாக இருந்துது மருத்துவ உலகையே அதிரவைத்தது. இது வரலாற்றிலும் இடம் பிடித்தது. ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டி செய்தியை பரப்பியது. இக்குழந்தையின் விசித்திர சம்பவத்தினை அந்நாட்டு அரசு புத்தகமாகவும் வெளியிட்டுள்ளது. இதனை ஆராய மாபெரும் மருத்துவக்குழுவும் முன்னின்றது.

கருவுற்று குழந்தை பெற்ற 5 வயது சிறுமி

குறித்த சிறுமி செப்டம்பர் 27ம் திகதி 1933 ம் ஆண்டு பிறந்துள்ளார். தனது 5 வயதில் கர்ப்பமடைந்துள்ளார். மே மாதம் 14 ம் நாள் 1939 ம் ஆண்டு அன்று அழகிய ஆரோக்கியமான ஒரு ஆண் குழந்தையை பெற்றுள்ளார். இவரது குழந்தை பிறக்கும் போது அதன் எடை 2700 கிரமாக இருந்துள்ளது. மருத்துவ வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் கருவுற்று குழந்தை பெற்ற பெண்ணாக இக்குழந்தை (பெண்) இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக