தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

புதன் கோள் (Mercury)


புதன் கோள் (Mercury) சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோளாகும். மேலும் இது சூரியக் குடும்பத்தில் மிகச்சிறிய கோளாகும். இது ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 88 நாள்கள் எடுத்துக்கொள்கிறது.

சூரியனிடமிருந்து புதனின் கோணப்பிரிகை(angular separation from the sun) குறைவாக (அதிகபட்சமாகவே 28.3oதான்) உள்ளதால், பெரும்பாலும் சூரியனின் பொலிவு காரணமாக புதனை காண்பது அரிது. எனவே தான் நம் சான்றோர் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவர். காலை அல்லது மாலை கருக்கல் நேரமே புதனைக் காண்பதற்கு சரியான தருணம்.

தோற்றத்தில் கிட்டத்தட்ட பூமியின் நிலவை ஒத்தது புதன். இது வெட்டவெளியுடன் கூடிய பல பெரும்பள்ளங்களைக்(craters) கொண்டு விளங்குகிறது. புவிநிலவைப் போலவே புதனும் வளிமண்டலம் அற்று உள்ளது. புதனுக்கு நிலவுகள் கிடையாது. ஆனால், புவிநிலவைப் போலன்றி, புதனுக்கு இரும்பாலான பெரிய உள்ளகம் உள்ளது. இதன் காரணமாக ஓரளவு காந்தப்புலமும் புதனுக்கு உண்டு. இதன் புறப்பரப்பு வெப்பநிலையின் நெடுக்கம் (range) −183 °C முதல் 427 °C வரை உள்ளது.

புதனைப்பற்றி அவ்வளவாக அறியப்படவில்லை என்றே கூற வேண்டும். புதனை நெருங்கிய இரண்டு விண்கலங்களில் முதலாவது மாரினர் 10 (Mariner 10). இது 1974-1975 காலகட்டத்தில் புதனை நெருங்கி அதன் புறப்பரப்பில் 45% வரை படமெடுத்தது (mapped). இரண்டாவதாக அனுப்பப்பட்ட மெசஞ்சர் 2008 சனவரியில் புதனருகில் பறந்த போது மேலும் 30% படமெடுத்தது. இது மீண்டும் 2009ல் புதனை நெருங்கியது. அதன்பின் 2011 மார்ச் 18 இல் புதனின் சுற்றுப்பாதையில் புகுத்தப்பட்டு (Orbital insertion) புதனின் துணைக்கோளாக மாறியது.
Stub W ta.svg

இந்தக் குறுங்கட்
 —

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக