தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

பலாப்பழம் பற்றிய தகவல்.........!!


பலாப்பழம் பற்றிய தகவல்.........!!

பழ வகைகளில் மிகவும் பெரிய பழம் என்றால் அது பலாப்பழம் தான் . இந்த பழம் பச்சை நிறத்திலான கரடு முரடான மேல் தோலை கொண்டதாக அமைந்திருக்கும். இதன் தோல் உறுதியாகவும் அதன் அடிப்பாகத்தில் சுளைகள் நிறைந்து காணப்படும் .

பலாச்சுளைகள் ஒவ்வொன்றும் நரம்புகள் போன்ற சடைகளின் இடையில் பதிந்திருக்கும். பலாப்பழத்தின் சுவை மரத்துக்கு மரம் வேறுபாடு உடையதாக இருக்கும். சில பலாப்பழ சுளைகள் தேன் போன்று இனிப்பாகவும், சில பழங்கள் இனிப்பு குறைந்தவையாகவும் இருக்கும்.

மஞ்சள் நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் பலாப்பழ சுளைகள் காணப்படும். பழுத்த, நல்ல பழம் என்றால் மஞ்சள் நிறத்தில் இருக்கும் . பலாக்கொட்டைகளை வேக வைத்தோ, அவித்தோ, பொரித்தோ , காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தோ சாப்பிடலாம் .

விட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது பலாப்பழத்தில். உடலுக்கும், மூளைக்கும் வலுவளிக்கும். நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது. பலாச்சுளைகளை மென்று தின்ன வேண்டும். இரத்தத்தை விருத்தி ஆக்கும் தன்மையும் இந்த பழத்தில் உண்டு.

எதுவும் அளவுடன் சாப்பிட வேண்டும், அதுதான் உடம்புக்கு நல்லது .

மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழமாகும். சில இடங்களில் மட்டுமே இது முறையான விவசாய முறைகளின் படி முழுமையான தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற பழத்தோட்டங்களில் துணைப்பயிராகவோ அல்லது வீட்டுத்தோட்டங்களிலோ வளர்க்கப்படுகிறது. உலகின் சில இடங்களில் பழங்களின் அரசன் என்று போற்றப்படுகிறது

இப்போது பலாப்பழ சீசன் என்பதால் எல்லா இடங்களிலும் பலாப்பழம் விற்கப்படுகிறது. பலா மரம், இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா ஆகிய நாடுகளில் பெரும்பாலாக வளர்கிறது. பலாச்சுளைகள் பொட்டாசியம், கல்சியம் , பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன. கொட்டைகள் உயிர்ச்சத்து பி1, பி2 ஆகியவை கொண்டுள்ளன.

100 கிராம் பலாப்பழத்தில், 303 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. இதனால் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க, பலாப்பழம் சிறந்ததாகும். பலாப்பழத்தில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளதால், எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தங்கள் உணவில் பலாப்பழத்தை தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். புற்றுநோயைத் தடுக்கும் "ஆன்ட்டி-ஆக்சிடெண்டுகள்'' பலாப்பழத்தில் உள்ளன என சமீபகால ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

வயது முதிர்தலைத் தள்ளிப் போட பலாப்பழம் உதவுகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. மலச்சிக்கலை நீக்க, பலாப்பழம் உதவுகிறது. சீசனில் கிடைக்கும் பழங்கள், நம் உணவில் இடம் பெற வேண்டும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பலாப்பழத்தின் சுவையை எல்லோரும் சுவைத்து பாருங்கள் . எல்லோரும் சாப்பிடுங்கள். அதன் பயன்களை அறிந்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக