பிறப்பு என்ற ஒன்று இருந்தால், நிச்சயம் இறப்பும் இருக்கும். நமது புராணங்கள், வேதங்கள் அல்லது சாஸ்திரங்கள், ஒருவரை மரணம் நெருங்கிறது என்றால் அது நிச்சயம் ஒருசில அறிகுறிகளை முன்பே வெளிக்காட்டும் என்று சொல்கிறது. அதிலும் ஒவ்வொரு புராணங்களும் ஒவ்வொரு விதமான அறிகுறிகள் தென்படும் என்று சொல்கிறது.
- யாரால் துருவ நட்சத்திரங்களைக் காண முடியவில்லையோ, அவர்கள் கூடிய விரைவில் இவ்வுலகை விட்டு செல்லப் போகிறார்கள் என வேத வசனங்கள் கூறுகின்றன.
- ஒருவர் சூரியனைக் காணும் போது, அதில் திரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு உருவத்தைக் கண்டால், மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தமாம். அதில் இத்தகையவர்கள் 11 மாதங்களில் இறந்துவிடுவார்கள் என்றும் வேத வசனங்கள் கூறுகின்றன.
- மணலில் ஒருவர் நடந்து செல்லும் போது, பாத சுவடுகள் முழுமையாகாமல் இருந்தால், அத்தகையவர்கள் 7 மாதங்களில் உலகை விட்டு சென்று விடுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாம்.
- கழுகு அல்லது காகம் ஒருவரது தலையில் அமர்ந்தாலோ அல்லது உரசினாலோ, துக்க காரியம் நடக்கப் போகிறது என்ற அர்த்தம். அதுவும் அத்தகையவர்கள் 6 மாதத்திற்குள் இறக்க வாய்ப்புள்ளதாம்.
- புராணங்களின் படி, ஒருவரது கண்களுக்கு தன்னைச் சுற்றி ஒரு திரிக்கப்பட்ட உருவத்தைக் கண்டால், அவர்கள் 4- மாதங்களில் உலகை விட்டு சென்றுவிடுவார்களாம்.
- மழை வருவதற்கான அறிகுறி ஏதுமின்றி, ஒருவர் மின்னலைக் கண்டால், அவர்கள் 2-3 மாதங்களில் இறந்து விடுவதற்கான வாய்ப்புள்ளதாக வேத வசனங்கள் கூறுகின்றன.
- ஒருவரது பாதம் குளித்த உடனேயே வறட்சி அடைந்துவிட்டால், அத்தகையவர்கள் அடுத்த 10 நாட்களில் இறந்துவிடும் வாய்ப்புள்ளதாம்.
- விளக்கு அணையும் போது, அதிலிருந்து வரும் வாசனையை நுகர முடியாவிட்டால், அவர்கள் இவ்வுலகில் இன்னும் சில காலம் மட்டுமே வாழ்வார்களாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக