சமயபுரம் மாரியம்மன்
நமது மண்ணையும், நமது முன்னோர்களையும் ஆண்ட சிற்றரசர்கள் முதல், பேரரசர்கள் வரை அனைத்து மன்னர்களுமே, பக்தியின் மார்க்கத்தாலும் சரித்திரத்தில் இடம் பிடிக்கவுமே பழம்பெரும் சிறப்புகளோடு எண்ணற்ற கோயில்களை தாம் வாழ்ந்த பகுதிகளில் நினைவுச் சின்னங்களாக கட்டி எழுப்பினர். அதன் பெருமையை, இன்று உலகம் பேசுகிறது. உலகம் முழுவதிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கிறது. அப்படி புகழ் பெற்ற கோயில்கள் பல, சரியான பராமரிப்பு இல்லாமல் இருக்கின்றன. தமிழகம் முழுவதும் அப்படி பராமரிப்பு இல்லாத கோயில்களையும், பிரசித்தி பெற்ற கோயில்களையும், இந்து சமய அறநிலையைத் துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் பராமரித்து பூஜைகளை நடத்தி வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் 38,630 கோயில்கள், இந்து சமய அறநிலையைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.
<
ஶ்ரீரங்கம் ஶ்ரீரங்கநாத சுவாமி கோயில்
வருமான கணக்குகள்
அவற்றுள் ஆண்டுக்கு 34,077 கோயில்கள்- ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான வருமானம் தரும் கோயில்களாகவும்; 3,571 கோயில்கள் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.2 லட்சம் வரை வருமானம் தரக்கூடிய கோயில்களாகவும் திகழ்கின்றன. சரியாக 662 கோயில்கள் ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் தரக்கூடிய வகையிலான கோயில்களாகவும்; 320 பிரசித்தி பெற்ற கோயில்களில் ரூ.10 லட்சத்திற்கும் மேல் வருமானம் கிடைப்பதாகவும் அதிகாரப் பூர்வமான தகவல் கூறுகிறது.
திருச்செந்தூர் முருகன்
திருத்தணி முருகன்
தமிழ்நாட்டிலேயே அதிக வருமானம் தரக்கூடிய கோயில்களின் பட்டியலில் பழனி முருகன் கோயில் முதல் இடத்திலும், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் 2வது இடத்திலும் உள்ளன. இதனைத் தொடர்ந்து வருவாய் ஈட்டுவதில் சரிக்கு சமமாக ஶ்ரீரங்கம் ஶ்ரீரங்கநாத சுவாமி கோயிலும், திருச்செந்தூர் முருகன் கோயிலும், திருத்தணி முருகன் கோயிலும் முதல் 5 இடங்களுக்குள் பட்டியலில் இருக்கின்றன. மேலும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்கள் ஆகியவை முறையே தொடர்ந்து அடுத்தடுத்த வருமானம் தரக்கூடிய கோயில்களாகத் திகழ்கின்றன.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்
இந்த வருமான கணக்குகள் எல்லாம், கோயிலில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் பணம் மற்றும் ஆபரணங்களோடு, கோயிலுக்குச் சொந்தமான கட்டிடங்கள், நிலங்கள் இன்னும் பிற சொத்துக்களைக் கொண்டும் கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக