தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, February 16, 2017

8 மணிக்கு முன் இதை செய்தால் வெற்றி நிச்சயம்..!

வாழ்வில் வெற்றி பெற்ற மனிதர்கள் எப்பொழுதும் மிகவும் பரபரப்புடனே காணப்படுகின்றனர். அவர்களின் அன்றாட வாழ்வு மிகவும் பரபரப்பானது. அவர்கள் கூட்டங்களுக்குச் செல்வது, பிறரைச் சந்திப்பது, அலுவலக வேலை, பணம் சம்பாதிப்பது போன்ற பல்வேறு விஷயங்களில் மிகவும் பரபரப்பாகவே காணப்படுகின்றனர். அவர்களால், அவர்களின் குடும்பம் மற்றும் நண்பர்களுக்குப் போதிய நேரம் ஒதுக்கக் கூட முடிவதில்லை. அதிலும் குறிப்பாக அவர்களால் அவர்களுக்கான நேரத்தைக் கூடச் சுதந்திரமாகச் செலவழிக்க முதிவதில்லை. இந்தப் பரபரப்பான வாழ்க்கையின் மத்தியிலும், வெற்றி பெற்ற மக்கள் நேரத்தின் அருமையை நன்கு உணர்ந்து அதற்கேற்ப தங்களுடைய நேரத்தை நன்கு நிர்வகிக்கின்றனர். அதில் தான் அவர்களது வெற்றியும் அடங்கியுள்ளது.

அதிகாலை
அதிகாலையில் இரை(இறை) தேடச் செல்லும் பறவைக்கே உணவு கிடைக்கும் என்கிற பழமொழியை இவர்கள் சிறிதும் பிசகாமல் கடைப் பிடித்து வருகின்றனர். வெற்றிபெற்ற பெரும்பாலானோர் தினந்தோறும் அதிகாலை சுமார் 4.30 மணிக்கே எழுந்து தங்களுடைய அன்றைய நாளை தொடங்குகின்றனர். அவ்வாறு அதிகாலையில் எழுவது அவர்களுக்கு அதிக நேரத்தைத் தருகின்றது. அந்த நேரத்தை அவர்கள் தங்களுடைய குடும்பம், உடற்பயிற்சி, குறிக்கோள் போன்ற பலவேறு காரணிகளுக்குப் பயன்படுத்துகின்றனர். வெற்றி பெற்ற மனிதர்கள் ஒரு பொழுதும் தங்களுடைய வேலைகளை ஒத்தி வைப்பதில்லை. அவர்களைப் பொருத்த வரை ஒவ்வொரு நாளும் மிகவும் முக்கியமானதே.

8 மணிக்கு முன்
வெற்றி பெற்ற மனிதர்கள் காலை 8 மணிக்கு முன் மேற்கொள்ளும் மிக முக்கியமான 5 விஷயங்களைச் செய்கிறார்கள். இவர்கள் செய்வதில் ஏதேனும் நீங்கள் செய்கிறீர்களா..? அப்படிச் செய்தால் உங்களுக்கும் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

உடற்பயிற்சி
வாழ்வில் உச்சத்தில் உள்ள அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்கும் ஒரு முக்கியமான பழக்கம் இது. அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து தவறாமல் அவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளுகின்றனர். உடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதே வெற்றி பெற்ற மனிதர்களின் முதல் குறிக்கோளாக விளங்குகின்றது. இவ்வாறு உடற்பயிற்சி மேற்கொள்வது, அவர்களை அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கின்றது.

தங்களுக்கான
நேரம் அவர்கள் அதிகாலை எழுந்த உடன் மின்னஞ்சல்கள் அல்லது செய்திகளைச் சரிபார்க்க மாட்டார்கள். அவர்கள் அதிகாலை எழுந்த உடன் நேராகத் தங்களுடைய வழக்கமான காலைப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்குவார்கள். வெற்றி பெற்றவர்கள் எப்பொழுதும் தங்களுடைய நீண்ட காலக் குறிக்கோளை மனதில் வைத்துப் பணியாற்றுகின்றனர்.

தியானம்
தியானம், வெற்றி பெற்ற மக்கள் கடைப் பிடிக்கும் மிகவும் முக்கியமாகும் விஷயங்களில் ஒன்றாகும். இது அவர்களைத் தங்களுடைய ஆற்றல், நேர்மறையான தோற்றம் மற்றும் நடைமுறை போன்றவற்றில் கவனம் செலுத்த உதவுகின்றது.

வாசிப்பு
ஆமாம், பெரும்பான்மையான வெற்றி பெற்ற மக்கள் தீவிரமான வாசிப்புப் பழக்கத்திற்கு உள்ளானவர்கள். அவர்கள் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் படிக்கின்றனர். அவர்கள் ஒரு பொழுதும் கற்றுக்கொள்ள மற்றும் படிக்க மறப்பதில்லை. அவர்கள் தீராத ஆர்வத்துடன் ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்கின்றனர்.

ஆரோக்கியமான உணவு
உங்களுடைய காலை உணவை ஒரு பொழுதும் தவிர்க்காதீர்கள். வெற்றி பெற்ற மக்கள் ஆரோக்கியமான மற்றும் சமச் சீரான மற்றும் புரதம் நிறைந்த உணவை உட்கொள்கின்றனர். ஆரோக்கியமான உணவு அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவுகின்றது.
16 Feb 2017

No comments:

Post a Comment