தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

”ஸ்ரீ ஸ்யாமளா தேவி”

‘சியாமளா’ என்றும், ‘ஸ்ரீ ராஜ சியாமளா’ என்றும், ‘ஸ்ரீமாதங்கி’ என்றும், ‘மஹாமந்திரிணீ’ என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை, மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள். தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள். கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள். வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆதலால் ‘மந்திரிணீ’ என்று அறியப்படுபவள். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள்.
ஸ்ரீ ராஜ மாதங்கி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியால், தன் கரும்பு வில்லில் இருந்து உருவாக்கப்பட்டவள். அம்பிகையின் பிரதிநிதியாக, ராஜ்ய பாரம் நடத்துபவள். அம்பிகையின் முத்ரேஸ்வரியாக இருப்பவள்.
இதை ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம், “மந்த்ரிணீ ந்யஸ்த ராஜ்யதுரே நம:” என்று போற்றுகிறது.
மேலும் ‘கதம்பவனவாஸினீ’ என்றும் இந்த அம்பிகை துதிக்கப்படுகிறாள். ஸ்ரீ லலிதா தேவியின் வாசஸ்தலமான ஸ்ரீ நகரத்தில், சுற்றிலும் கதம்பவனம் நிறைந்த பகுதியில் வாசம் செய்வதாலேயே சியாமளா தேவிக்கு இந்த திருநாமம். மதுரை மீனாட்சி அம்மன் இந்த அம்பிகையின் அம்சமாகவே போற்றப்படுகிறாள். மதுரைக்கு ‘கடம்பவனம்’ என்ற ஒரு பெயரும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
‘கேயசக்ர-ரதாரூட-மந்த்ரிணீ-பரிசேவிதா’… (ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்)
गेयचक् ररथारूढ मन्त्रिणी परिसेविता ….. ललिता सहस्रनाम स्तोत्रम्
பண்டாசுர வதத்தின் போது, கேயசக்ர ரதத்தில் இருந்து அம்பிகைக்கு உதவியாக சியாமளா தேவி போர் புரிந்து, பண்டாசுரனின் தம்பியான விஷங்கனை வதம் செய்தாள்.
‘மந்த்ரிண்யம்பா -விரசித- விஷங்கவத- தோஷிதாயை நம: ” … (ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்).
मन्त्रिण्यम्बा विरचितव िषङ्गवध तोषिता ….. ललिता सहस्रनाम स्तोत्रम्
சூக்ஷ்ம அர்த்தங்களின்படி பார்த்தால், அகங்காரம் மிகுந்த ஜீவனே ‘பண்டாசுரன்’ (உலகாயத) விஷயங்களில் ஜீவனுக்கிருக்கும் ஆசையே விஷங்கன். மேலும், குறுக்கு வழியில் செல்லும் புத்தியையும் விஷங்கன் குறிக்கிறான். சியாமளா தேவி, நேர்வழியில் செல்லும் மனதிற்கும் புத்திக்கும் ஆத்மஞானம் அறியும் மனநிலைக்கும் அதிபதி. ஆகவே, சியாமளா தேவியே ‘விஷங்க வதம்’ செய்கிறாள்.
ஸ்ரீ லலிதோபாக்கியானம், ‘சங்கீத யோகினி சியாமா, ச்யாமளா, மந்திர நாயிகா’ என்று துவங்கி அம்பிகையைப் போற்றுகிறது.
ஸ்ரீ ஸ்யாமளா தேவி தண்டகம் சர்வ வல்லமை படைத்தது. அருள் அலைகளை ஈர்த்துப்பிடித்து இருக்கும் இடமெங்கும் பரப்ப கூடியது. நம்முள்ளே ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. வாழ்வில் உயர இந்த அருள் அலைகள் மிக மிக தேவை. வாழ்வு நல்ல வளம் பெற இந்த அருள் அலைகள் தேவை. துஷ்ட தேவதைகளை விரட்டி அடிக்கும் சக்தியுடையது. வாழ்வில் கல்வி, செல்வம், இவைகள் அமைய இந்த ஸ்ரீ ஸ்யாமளா தேவி தாயின் அலைகள் மிகவும் இன்றியமையாதது. இவள் இருக்கும் இடமெங்கும் அமைதி கரைபுரண்டோடும். இவள் கருணையோ கடல் போன்றது.
காளிதாசர் அருளிய இந்த ஸ்யாமளாதேவி தண்டகத்தில் குறிப்பிட்ட ஒரு சில பீஜங்களை சரியான உச்சரிப்பில் சொல்லும் போது அது ஒரு வித அருள் அலைகளை தொட்டு உரசிச்செல்கிறது. இது மிகப்பெரும் ஆற்றலை மனதிற்குள் திணித்துவிட்டு செல்கிறது.
இந்த ஸ்யாமளாதேவி தண்டகத்தில் ஒரு சில ஸ்லோகங்கள், அதில் ஒரு சில வரிகள், ஒரு சில வார்த்தைகள், ஒரு சில பீஜ அதிர்வுகள், எங்கேனும் ஒரு விதத்திலாவது, மனதினை மிக நுண்ணியதாக்கி, அமைதியை திணித்து, அம்பாளின் சக்தியின் ஜீவ அலைகளை உணரவைக்கும் சக்திவாய்ந்தவை. அந்த அதிர்வு நிலை, உணர்வு நிலை கிடைத்தவுடன், அப்படியே அதில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருக்கலாம். என்ன ஒரு அற்புதமான அலை இந்த ஸ்லோகத்தினுள் இருக்கிறது.
कारुण्यवारांनिधिम् … मीनाक्षी पञ्चरत्नम् ( श्रीमच्छङ्करभगवत )
காருண்யா வாராம் நிதிம் .. மீனாட்சி பஞ்சரத்னம் (ஆதிசங்கரர்)
இவளின் கருணை எவர் வரினும் அள்ள அள்ள குறையாத கடல்.
வாழ்வில் பொருள் பெரியது அல்ல. நல்ல கல்வியறிவு வேண்டும், நல்ல சொல்வன்மை வேண்டும், எதையும் எதிர்கொள்ள நல்ல தைரியம் வேண்டும், கருணை நிறைந்த உள்ளம் வேண்டும், வாழ்வில் நம் அன்றாட சாதாரண தேவைகள் சரிவர இன்னலின்றி பூர்த்திசெய்யவேண்டும். இவளின் ஒரு துளி கருணை அலைகளை அன்பால் உருகி, மெல்ல மெல்ல இதன் அலைநீளம் பிடித்து, உட்சென்று, ஆழ்ந்து அமைதியின் விளிம்பில் சென்று, கொட்டிக்கிடக்கும் தெய்வீகத்தை உணர வேண்டும்.
श्रीराजराजेश्वर्यष्टकम् … नवयौवना शुभकरी
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் .. நவயௌவனா ஶுப⁴கரீ
எப்படி ஒரு பெண் என்றுமே இளமையுடன் அழகுடன் இருக்க முடியும்? மானுட வாழ்வில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தானே அழகுடன் இருக்க முடியும். பிறகு முதுமை ஆட்கொண்டுவிடுமே? ஆனால் இவளோ என்றுமே ஒரு வசீகரிக்கும் அழகுடன் இருக்கிறாள். இவள் அழகும் நிறைந்தவள், தாய்மை சக்தியும் நிறைந்தவள், அன்பும் நிறைந்தவள், கண்களில் கருணையும் நிறைந்தவள்.
இந்த ஈனப்பிறவியில் இவளின் கருணை வேண்டும். இவள் கருணை இல்லையேல் அது ஒரு வறண்ட நிலத்திற்கு ஒப்பாகும். இவள் கருணை இன்றி இந்த உலகத்தில் சுபிக்க்ஷம் நிலவாது. இவளை பற்றி, இவள் பெருமை பற்றி, இவள் தரும் அன்பு பற்றி, இவள் தரும் ஆற்றல் பற்றி, இவள் தரும் ஞானம் பற்றி, சிந்திக்க சிந்திக்க, என்னே மகிழ்ச்சி இவளுக்கு.
இவள் அருளும் பாக்கியங்களை இவளிடமே சொல்லி, இவள் அருள் உணர, பேரானந்தம் பெருக்கெடுக்கிறது. கருணை துளியை அள்ளி வீசுகிறாள்.
உருத்திரண்ட சக்தியொன்று உன்னத பெண் வடிவில். அழகிய முகம், அசையாத இமையும், அழகாண கண்களும், நீல நிற மேனியும், நிமிர்ந்த பார்வையும், பார்ப்பவரை ஆழ்ந்து உட்நோக்க, தத்தம் கர்ம வினையையும் கவனித்து, சூட்சுமத்தையும் தட்டி எழுப்பி, அருள் அலைகளை பரப்பும் அற்புதம். எவரும் இப்பார்வைக்கு ஈடுகொடுக்க முடியாது. வசீகரிக்கும் முகம். ஒரு சிறு பார்வை சுரீரென்று உறைந்து கிடக்கும் தெய்வீக தன்மையை தட்டி எழுப்பி சிந்திக்க வைக்கக்கூடியது. சர்வ வல்லமை படைத்தது.
என்ன ஒரு அழகான பார்வை. ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களை சிந்தனை வாயிலாக அருவி போல் கொட்டவைக்கிறது. அ முதல் தொடங்கி ஒவ்வொரு எழுத்தின் வாயிலாக இவள் பெருமையை சொல்லவைக்கும் சொல்வன்மை நாவில், வாக்கில் துள்ளி எழுகிறது.
இவள் ஒரு சங்கீதப்பிரியை. எங்கு சங்கீதம் உள்ளதோ அங்கு இவள் இருக்கிறாள். எங்கு உள்ளம் வருடும் பாடல் ஒலிக்கிறதோ, அங்கே இவள் இருக்கிறாள். கைகளில் மாணிக்க வீணையை ஏந்தியவள். இந்த வீணை மிக இதமாக இதயத்தை வருடி நல்ல அன்பின் ஜீவ அலைகளை தொடும் சக்தியுள்ளது.
வீணையின் நாதம் மனதோடு மிக நெருங்கிய தொடர்புடையது. மனதின் அலைகளோடு ஒட்டி உறவாடி நல்ல அதிர்வுள்ள அலைகளை எற்படுத்தக்கூடியது. எப்பொழுதேனும் உள்ளம் சோர்வுற்றால் வீணை ஒலியை மட்டும் கேட்டுப்பாருங்கள். சோர்வுஅலைகளை விரட்டி மெல்ல மெல்ல நல்ல அலைகளை உள்ளமெங்கும் பரப்பும் மகத்துவம் வாய்ந்தது.
எந்த ஒரு பாடலில் வரும் வீணையின் நாதத்தை மட்டும் சற்றே தனியாக பிரித்து கவனித்து பாருங்கள், ஏதோ ஒரு ஈர்ப்பு அதில் உள்ளது என்பது புலப்படும். அந்த ஈர்ப்பு மனதோடு உறவாடும் தன்மை வாய்ந்தது.
காலம் காலமாக ஆத்மாவுடன் பயணம் செய்வது பாவமும் புண்ணியமுமே. இன்றைய தலைமுறையில் எந்த ஒரு பிரச்சனைக்கும் மூல காரணம் அதன் கர்ம வினைகள் தானே. இதன் சாரம்சமே வாழ்வின் அமைதிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்வு அமைதியின்றி நிலை தடுமாற புண்ணியதத்தின் பற்றாக்குறை தான் காரணம். கர்மவினை பதிவுகள் நமது கருமையத்தில் பதிந்து, நாள் தோறும் நொடி தோறும், அலையாக கசிந்து, மென்மையான மனதினை சூழ்ந்துகொண்டு நம்மை எதையும் முழுமையாக செய்யவிடுவதில்லை. இதை எல்லாம் விரட்டி அடிக்க பல வழிகள். அதில் ஒன்று தான் இந்த ஸ்ரீ ஸ்யாமளா தேவி தண்டகம்.
இதை யார் வேண்டுமானாலும் தூயமனதுடன் சொல்லலாம். நீர் போல, காற்று போல அனைவருக்கும் பொது இது. இந்த ஸ்லோகங்கள் இறை அலைகளை அப்படியே ஏதேனும் ஒரு விதத்தில் தாங்கிவரும் ஒரு வார்த்தை கோர்வைகள்.
மனதை மிக நுண்ணிய அலைநீளத்தில் வைத்தவர்கள், என்றும் இறைஅலைகளிலேயே திளைத்தவர்கள், சக்தியின் அருள் ஆற்றலை உணர்ந்தவர்கள், மனதில் அன்பு எனும் சூட்சும ஆற்றலை வெகுகாலம் நிலைநிறுத்தப் பழகியவர்கள், இவர்கள் இறை அலைகளை மிக அழகாக உள்வாங்கி, அப்படியே உணர்ந்து, அதை யாவரும் உணரும் வண்ணம் மிக சரியான அதிர்வுகள் தருமாறு, மிக சரியான பீஜங்களால் கோர்த்து, வார்த்தைகளை வைத்து மிக அழகாக compose செய்து கொடுத்திருக்கிறார்கள். மிகவும் போற்றப்படவேண்டியவர்கள். மிக உயர்ந்த உள்ளம் கொண்ட ஆத்மாக்கள்.
॥ श्यामलादण्डकं कालिदासविरचितम् ॥ ஶ்யாமலாதண்டகம் காலிதாஸவிரசிதம் ॥
॥ அத ஶ்யாமலா தண்டகம் ॥ … ॥ अथ श्यामला दण्डकम् ॥
॥ த்யானம் ॥ … ॥ ध्यानम् ॥
माणिक्य वीणा मुपलालयन्तीं मदालसां मञ्जुलवाग्विलासाम् । माहेन्द्र नीलद्युति कोमलाङ्गीं मातङ्ग कन्यां मनसा स्मरामि ॥ १॥
चतुर्भुजे चन्द्रकलावतंसे कुचोन्नते कुङ्कुमरागशोणे ।. पुण्ड्रेक्षुपाशाङ्कुशपुष्पबाण- हस्ते नमस्ते जगदेकमातः ॥ २॥
மாணிக்ய வீணாம் முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்சுளவாக் விலாஸாம் |
மாஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி ||
சதுர்புஜே சந்த்ரகலாவதம்ஸே குசோன்னதே குங்கும ராகஸோனே |
புண்ட்ரேக்ஷு பாஸாங்குஸ புஷ்பபாண- ஹஸ்தே நமஸ்தே ஜகதேக மாத: ||
I always meditate on the daughter of Matanga Maharshi who playfully holds a Veena made of Mankikya, who is lazy by intoxication, whose speech is picturesque and beautiful and whose body is resplendent like the dark blue gemstone.
O The Mother of the Worlds who has four hands, whose head is adorned with the crescent moon, who has a full bosom, who has a complexion red as kukum and who carries in her hands a bow of sugarcane, arrows of flowers, the rope and the ankusa (goad), my prostrations before you.
தியான ஸ்லோகத்தில், அம்பிகை, மாணிக்கக் கற்கள் பதித்த வீணையை வாசிப்பதில் விருப்பமுடையவளாக, எட்டுத் திருக்கரங்கள் உடையவளாக, மரகதப் பச்சை வண்ணம் கொண்டவளாக, திருமார்பில் குங்குமச்சாந்து தரித்தவளாக, தன் திருநெற்றியில், சந்திரகலையை அணிந்தவளாக, கரங்களில், கரும்பு வில், மலரம்பு, பாச அங்குசம் கொண்டவளாக சித்தரிக்கப்படுகிறாள்.
அம்பிகையின் திருக்கரங்களில் கிளியும் இடம்பெற்றிருக்கிறது. இதில் அம்பிகையின் மரகதப் பச்சை வண்ணம், ஞானத்தைக் குறிக்கிறது. வித்யாகாரகனான புத பகவானுக்கு உரிய நிறமும் பச்சையே. வீணை, சங்கீத மேதா விலாசத்தையும், கிளி, பேச்சுத் திறமை வாய்க்க அம்பிகையின் அருள் அவசியம் என்பதையும் ஆத்ம ஞானத்தையும் குறிக்கிறது. மலரம்பு கலைகளில் தேர்ச்சியையும், பாசம் ஈர்க்கும் திறனையும், அங்குசம் அடக்கியாளும் திறனையும், கரும்பு உலகியல் ஞானத்தையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
॥ विनियोगः ॥ … ॥ வினியோக:³ ॥
माता मरकतश्यामा मातङ्गी मदशालिनी । कुर्यात् कटाक्षं कल्याणी कदम्बवनवासिनी ॥ ३॥
மாதா மரகதஶ்யாமா மாதங்கீ³ மத³ஶாலினீ । குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கத³ம்ப³வனவாஸினீ ॥ 3॥
May the Mother, who is dark as the marakata gemstone, who is the daughter of Matanga maharshi, who is exuberant, who is auspicious and who abides in the kadamba forest, cast on me the glances from her eye-corners.
॥ ஸ்துதி ॥ … ॥ स्तुति ॥
जय मातङ्गतनये जय नीलोत्पलद्युते । जय सङ्गीतरसिके जय लीलाशुकप्रिये ॥ ४॥
ஜய மாதங்க³தனயே ஜய நீலோத்பலத்³யுதே । ஜய ஸங்கீ³தரஸிகே ஜய லீலாஶுகப்ரியே ॥ 4॥
Victory to the daughter of Matanga. Victory to the one who has the complexion of the dark blue lily. Victory to the one who enjoys and appreciates music. Victory to the one who is fond of the playful parrot.
॥ दण्डकम् ॥ … ॥ த³ண்ட³கம் ॥
जय जननि सुधासमुद्रान्तरुद्यन् मणीद्वीप संरूढ् – बिल्वाटवीमध्य कल्पद्रुमा कल्प कादम्ब कान्तारवासप्रिये,
कृत्तिवासप्रिये, सर्वलोकप्रिये |
ஜய ஜனனீ ஸுதாஸமுத்ரான்த ஹ்ருத்யன் மணித்வீப ஸம்ரூட பில்வாடவீமத்ய கல்பத்ருமா கல்ப காதம்ப காந்தாரவாஸப்ரியே
க்ருத்தி வாஸப்ரியே ஸர்வ லோகப்ரியே |
(Victory to the Divine Mother) who is the darling of Siva and the whole world and who likes to live in the forest of kalpavriksha-like kadamba trees surrounding which is a forest of bilwa trees on the island of Manidweep in the midst of the ocean of nectar.
सादरारब्ध सङ्गीत सम्भावना सम्भ्रमालोलनी पस्रगाबद्ध चूलीसनाथत्रिके सानुमत्पुत्रिके |
ஸாதராரப்த ஸங்கீத ஸம்பாவனா ஸம்ப்ரமாலோலநீ பஸ்கராபத்த சூலீஸனாதத்ரிகே ஸானுமத்புத்ரிகே |
Victory to the Divine Mother) who is the daughter of Himavan, whose locks, around which are tied garlands of nipa which oscillate when she nods in appreciation of the melodious music started in her honor.
शेखरी भूतशीतां शुरेखामयूखावलीबद्ध-सुस्निग्ध नीलालकश्रेणि शृङ्गारिते लोकसम्भाविते |
कामलीलाधनु स्सन्निभ भ्रूलता पुष्पसन्दोह सन्देह कृल्लोचने,
वाक्सुधासेचने, चारुगोरोचना पङ्ककेलील लामाभिरामे, सुरामे | रमे |
ஸேகரீ பூதஸீதாம் ஸுரேகாமயூகாவலிபத்த ஸுஸ்நிக்த நீலாலகஸ்ரேணி ஸ்ருங்காரிதே லோகஸம்பாவிதே |
காமலீலாதனு: ஸன்னிப ப்ரூலதா புஷ்பஸந்தோஹ ஸந்தேஹ க்ருல்லோசனே வாக்ஸுதாஸேசனே
சாருகோரோசனா பங்ககேலீல லாமாபிராமே ஸுராமே | ரமே |
(Victory to the Divine Mother) who is worshipped by the people and whose beauty is enhanced by the dark blue locks which are smooth and which are illumined by the rays from the crescent moon adorning her forehead.
(Victory to the Divine Mother) who is the embodiment of beauty, who is Lakshmi herself, whose eye-brows give the impression of the bow of Cupid, whose eyes lead one to doubt that they are the flowers of the eye-brow creepers, who showers sweet words and who is adorned with a pretty bindi (a round mark on the forehead) of gorochana.
प्रोल्लसद्ध्वालिका मौक्तिकश्रेणिका चन्द्रिका मण्डलोद्भासि लावण्य गण्डस्थलन्यस्त कस्तूरिकापत्र रेखासमुद्भूत सौरभ्य- सम्भ्रान्त भृङ्गाङ्ग नागीत सान्द्रीभवन्मन्द्र तन्त्रीस्वरे,सुस्वरे | भास्वरे |
ப்ரோல்லஸத்வாலிகா மௌக்திகஸ்ரேணிகா சந்த்ரிகா மண்டலோத்பாஸி லாவண்ய கண்டஸ்தலன்யஸ்த கஸ்தூரிகாபத்ர ரேகாஸமுத்பூத ஸௌரப்ய ஸம்ப்ரான்த ப்ருங்காங்க நாகீத ஸாந்த்ரீபவன்மந்த்ர தந்த்ரீஸ்வரே, ஸுஸ்வரே | பாஸ்வரே |
(Victory to the Divine Mother) whose beautiful cheeks are lighted up by the moonlight-like lustre from the string of pearls adorning the short curly hair (playing on her forehead) and the melody from the Veena is made denser by the humming of honey-bees which are attracted by the fragrance arising from the patterns of kasturi made on her cheeks. Victory to the Mother who has a melodious voice and who has a resplendent form.
वल्लकी वादनप्रक्रिया लोलतालीद लाबद्ध-ताटङ्क भूषाविशेषान्विते, सिद्धसम्मानिते |
வல்லகீ வாதனப்ரக்ரியா லோலதாலீத லாபத்த தாடங்க பூஷாவிஷேஷான்விதே, ஸித்தஸம்மானிதே|
(Victory to the Divine Mother) who is honoured by the siddhas and who is adorned with tatankas (ear-ornaments) crafted from palm leaves which oscillate in the process of her playing the veena.
दिव्यहाला मदोद्वेल हेला लसच्चक्षुरान्दोलन श्रीसमाक्षिप्तकर्णैक- नीलोत्पले | श्यामले पूरिताशेषलोकाभि | वाञ्छाफले श्रीफले |
திவ்யஹாலா மதோத்வேல ஹேலா லஸச்சக்ஷுராந்தோலன ஸ்ரீஸமாக்ஷிப்தகர்ணைக நீலோத்பலே|
ஶ்யாமலே, பூரிதாஸேஷலோகாபி | வாஞ்சாபலே ஸ்ரீபலே |
(Victory to the Divine Mother) the beauty of whose eyes, undulating because of the inebriation caused by imbibing somarasa, surpasses the beauty of the blue lily worn on her ears, who is of dark blue complexion, who fulfils the desires of all the people, who is without blemish and who gives riches as the fruit (of worshiping her)
स्वेद बिन्दूल्ल सद्फाल लावण्य निष्यन्द सन्दोह सन्देह कृन्नासिकामौक्तिके सर्वविश्वात्मिके सर्वसिद्ध्यात्मिके कालिके |
ஸ்வேத பிந்தூல்ல ஸத்ப்பால லாவண்ய நிஷ்யந்த ஸந்தோஹ ஸந்தேஹ க்ருன்னாஸிகாமௌக்திகே ஸர்வ விஸ்வாத்மிகே ஸர்வஸித்தயாத்மிகே காளிகே |
(Victory to the Divine Mother) who is Kali, who is the soul of all mantras and all psychic powers and the pearl on whose nose-stud gives the impression that it is a drop oozing from the beauty of her forehead with beads of perspiration glistening on it.
मुग्द् धमन्दस्मितोदार वक्त्र-स्फुरत् पूग ताम्बूल कर्पूर खण्डोत्करे | ज्ञानमुद्राकरे | सर्वसम्पत्करे पद्मभास्वत्करे | श्रीकरे |
முக்த மந்தஸ்மிதோதார வக்த்ரஸ்புரத்பூக தாம்பூல கற்பூர கண்டோத்கரே |
ஞானமுத்ராகரே | ஸர்வஸம்பத்கரே பத்மபாஸ்வத்கரே | ஸ்ரீகரே |
(Victory to the Divine Mother) whose face is lighted up by a beautiful smile, whose mouth is fragrant with betel leaf areca nut and camphor pieces, who sports the gnana mudra on her hand, who showers riches (on her devotees) and whose hands are beautiful and soft like the lotus.
कुन्द पुष्पद्युतिस्निग्ध दन्तावली निर्मला लोल कल्लोल सम्मेलन स्मेर शोणाधरे | चारुवीणाधरे | पक्वबिम्बाधरे |
குந்த புஷ்பத்யுதிஸ்நிக்த தந்தாவலீ நிர்மலா லோல கல்லோல ஸம்மேலனஸ்மேர ஸோனாதரே | சாருவீணாதரே | பக்வபிம்பாதரே |
(Victory to the Divine Mother) who carries the beautiful veena, whose lips are red like the ripe bimba fruit and whose teeth shine like jasmine buds and the red of her lips mixes with the pure white of her teeth when she smiles.
सुललित नवयौवना रम्भ चन्द्रोदयोद्वेल लावण्य दुग्धार्णवाविर्भ वत् कम्बु बिम्बोक भृत्कन्थरे | सत्कलामन्दिरे | मन्थरे |
ஸுலலித நவயௌவனா ரம்ப சந்த்ரோதயோத்வேல லாவண்ய துக்தார்ணவாவிர்ப வத்கம்பு பிம்போக ப்ருத்கந்தரே | ஸத்கலாமந்திரே | மந்த்தரே |
(Victory to the Divine Mother) whose gait is leisurely, who is the repository of all fine arts, whose neck is like the conch emerging from the milky ocean of the high tide of beauty caused by the rising moon of freshness of youth, delicate and beautiful.
दिव्यरत्नप्रभा बन्धुरच्छन्न हारादि भूषा समुद्योतमाना नवद्याङ्गशोभे | शुभे |
திவ்யரத்னப்ரபா பந்துரச்சன்ன ஹாராதி பூஷா ஸமுத்யோதமானா நவத்யாம் ஸுஸோபே | ஸுபே |
(Victory to the Divine Mother) who is the embodiment of auspiciousness and whose blemishless beauty is lighted up by ornaments like necklaces studded with divine diamonds and gems.
रत्नकेयूर रश्मिच्छटापल्लव प्रोल्लस द्दोल्लता राजिते योगिभिःपूजिते |
ரத்னகேயூர ரஸ்மிச்சடாபல்லவ ப்ரோல்லஸத் தோர்லதா ராஜிதே யோகிபி: பூஜிதே |
(Victory to the Divine Mother) who is worshipped by the yogis and whose hands shine with the rays from the diamond-studded keyura, the rays giving the impression of tender leaf buds.
विश्वदिङ्मण्डलव्यापि-माणिक्य-तेजस्फुरत्-कङ्कणालंकृते- विभ्रमालंकृते- साधुभिस्सत्कृते!
விஸ்வதிங்மண்டல வ்யாபி மாணிக்ய தேஜ:ஸ்புரத்கங்கணாலங்க்ருதே விப்ரமாலங்க்ருதே ஸாதகை: ஸத்க்ருதே |
(Victory to the Divine Mother) who is worshipped by sadhus, the splendour of the manikya in whose bangles spreads in all directions of the world and who is splendidly adorned.
वासरारंभवेला-समुज्जृंभमाणारविन्द-प्रतिद्वन्द्वि-पाणिद्वये ! संततोद्यद्दये! अद्वये !
வாஸராரம்ப வேலஸமுஜ்ரும்ப மாணாரவிந்த ப்ரதித்வன்த்வி பாணித்வயே | ஸந்ததோத்யத்தயே | அத்வயே |
(Victory to the Divine Mother) who is one without a second, whose compassion is always ascendant and whose both hands surpass the beauty of the blooming lotus in the early morning.
दिव्य्ररत्नोर्मिका-दीधितिस्तोम-संध्यायमानाङ्गुलीपल्लवोद्यन्नखेन्दु-प्रभामण्डले ! सन्नताखण्डले ! चित्प्रभामण्डले ! प्रोल्लसद्कुण्डले!
திவ்யரத்னோர்மிகா தீதிதிஸ்தோம ஸந்த்யாய மானாங்குளி பல்லவோத்யன்னகேந்து |
ப்ரபாமண்டலே, ஸன்னதாகண்டலே | சித்ப்ரபா மண்டலே | ப்ரோலஸத்குண்டலே |
(Victory to the Divine Mother) before whom bows Indra, who is effulgent consciousness, whose ear-globes shine and whose nails give the impression of the orb of the rising moon, the diamond-studded rings on her fingers giving out bright red rays creating the impression of evening twilight period (sayam sandhya).
तारकाराजिनीकाश हारावलिस्मेर चारुस्तना भोगभारान मन्मध्य-वल्लीवलिच्छेद वीचीसमुद्यत्समुल्लास सन्दर्शिताकार सौन्दर्यरत्नाकरे |. वल्लकीभृत्करे | किङ्कर श्रीकरे |
தாரகாராஜிநீகாஸ ஹாராவலிஸ்மேர சாருஸ்தனா போகபாரான மன்மத்ய வல்லீபலிச்சேதவீசீ *ஸமுல்லாஸ ஸந்தர்சிதாகார ஸௌந்தர்ய ரத்னாகரே வல்லகீப்ருத்கரே | கிங்கர ஸ்ரீகரே |
(Victory to the Divine Mother) who showers wealth on those serving her, whose bosom is adorned by several gold chains studded with diamonds resembling a cluster of stars and who is slightly bent (because of the weight of the breasts) and who has wave-like folds in the middle which further enhance the beauty of what is already an diamond mine (or ocean) of beauty.
हेमकुम्भोपमोत्तुङ्ग वक्षोजभारावनम्रे | त्रिलोकावनम्रे |
ஹேமகும்போப மோத்துங்க வக்ஷோஜ பாராவநம்ரே | த்ரிலோகாவனம்ரே |
(Victory to the Divine Mother) whose full breasts resemble pots of gold causing her to bend slightly and to whom the three worlds bow down (as the Divine Mother)
लसद्वृत्तगम्भीर नाभीसरस्तीर शैवाल शङ्काकरश्याम रोमावलीभूषणे | मञ्जुसम्भाषणे |
லஸத்வ்ருத்த கம்பீர நாபிஸரஸ்தீர ஸைவால ஸங்காகரஸ்யாம ரோமாவலீ பூஷணே | மஞ்சுஸம்பாஷனே |
(Victory to the Divine Mother) whose speech is sweet and who is adorned with dark hair around the deep and round navel which makes one think of a lake with moss on its banks.
चारुशिञ्चत्कटीसूत्रनिर्भत्सितानङ्गलीलधनुश्शिञ्चिनीडम्बरे | दिव्यरत्नाम्बरे |
சாருஸிஞ்ஜத்கடீஸூத்ர நிர்பர்த்ஸிதாநங்க லீலாதனு: ஸிஞ்ஜனீ டம்பரே, | திவ்யரத்னாம்பரே |
(Victory to the Divine Mother) who is clothed in divine gem-studded raiment and the tinkling sound from whose waist-belt competes with that from the sporty bow of Kama (Cupid) (in arousing passionate love)
पद्मरागोल्लस न्मेखलामौक्तिकश्रोणिशोभाजितस्वर्णभूभृत्तले | चन्द्रिकाशीतले |
பத்மராகோல்லஸன் மேகலா பாஸ்வரஸ்ரேணி ஸோபாஜிதே ஸ்வர்ண பூப்ருத்தலே| சந்த்ரிகா ஸீதலே|
(Victory to the Divine Mother) who is as cool as the moonlight and the expanse and beauty of whose hip, adorned with a mekhala which shines with red stones, surpasses the expanse and beauty of the plateau of the golden mountain (Meru)
विकसित नवकिंशुकाताम्र दिव्यां शुकच्छन्न चारूरुशोभा पराभूत सिन्दूर शोणाय मानेन्द् रमातङ्ग हस्मार्ग्गले| वैभवानर्ग्गले| श्यामले|
வகஸித நவகிம்ஸுகாதாம்ர திவ்யாம் ஸுகச்சன்ன சாரூருஸோபா பராபூத ஸிந்தூர ஸோணாய மானேந்த்ர மாதங்க ஹஸ்தார்கலே | வைபவானர்கலே | ஸ்யாமலே |
Victory to the Divine Mother) whose beautiful thighs, covered with divine clothes with the colour of new blooming kimshuka flowers, compete with Indra’s elephant’s trunk smeared with sindur, who is a dark beauty and whose grace flows unimpeded.
कोमलस्निग्द्ध नीलोत्पलोत्पादि तानङ्गतूणीर शङ्काकरोदार जङ्घालते चारुलीलागते |
கோமளஸ்நிக்த நீலோத்பலோத்பாதி தானங்க தூணீர ஸங்காக ரோதார ஜங்காலதே சாருலீலாகதே |
(Victory to the Divine Mother) whose lower leg is pretty and smooth giving the impression of Kama’s quiver made of blue lilies and whose gait is pretty and playful.
नम्रदिक्पाल सीमन्तिनी कुन्तलस्निग्द्ध नीलप्रभापुञ्च सञ्जात दुर्वाङ्कुरा शङ्क सारङ्ग संयोगरिङ्खन्न खेन्दूज्ज्वले प्रोज्ज्वले| निर्मले|
நம்ரதிக்பால ஸீமந்தினீ குந்தலஸ்நிக்த நீலப்ரபாபுஞ்ச ஸஞ்ஜாத தூர்வாங்குரா ஸங்க ஸாரங்க ஸம்யோகரிங்கன்ன கேந்துஜ்வலே ப்ரோஜ்வலே | நிர்மலே |
(Victory to the Divine Mother) who is resplendent and pure and whose toe nails are brilliant and who is surrounded by deer which are attracted by the dark smooth locks of the consorts of the presiding deities of the eight quarters who bow down at her feet. The deer are deluded into thinking, by the texture and colour of the hair, that it is green durva grass.
प्रह्व देवेश लक्ष्मीश भूतेश तोयेश वाणीश कीनाश दैत्येश यक्षेश वाय्वग्निकोटीर माणिक्य संहृष्ट बाला तपोद्दाम– लाक्षारसारुण्य तारुण्य लक्ष्मी गृहिताङ्घ्रि पद्म्मे सुपद्मे | उमे |
ப்ரஹ்வ தேவஸ லக்ஷ்மீச பூதேச தோயேச வாணீ ச கீனா ச தைத்யே ச யக்ஷேச வாய்வக்னி மாணிக்ய சங்க்ருஷ்ட கோடீர பாலா தபோத்தாம லாக்ஷாரஸாருண்ய தாருண்ய லக்ஷ்மீ க்ருஹீதாங்க்ரீ பத்மே ஸுதப்மே | உமே |
Victory to the Divine Mother) before whom bow down Indra, Vishnu, Siva, the lokapalas, Brahma, Yama, the Asura King, Kubera, Vayu, Agni and whose feet, adorned with red laksharasa and caressed by Lakshmi, shine like the light of the rising sun by the rays of manikya in the crowns of the celestials bowing down.
सुरुचिरनवरत्नपीठस्थिते सुस्थिते | रत्नपद्मासने रत्नसिम्हासने शङ्खपद्मद्वयोपाश्रिते विश्रुते |
तत्र विघ्नेश दुर्गावटुक्षेत्रपालैर्युते | मत्तमातङ्ग कन्या समूहान्विते | भैरवैरष्टभिर्वेष्टिते |
मञ्चुला मेनकाद्यङ्ग नामानिते | देवि वामादिभिः शक्तिभिस्सेविते |
धात्रि लक्ष्म्यादिशक्त्यष्टकैः संयुते | मातृकामण्डलैर्मण्डिते |
यक्षगन्धर्वसिद्धाङ्गना मण्डलैरर्चिते |
भैरवी संवृते पञ्चबाणात्मिके | पञ्चबाणेन रत्या च सम्भाविते |
ஸுருசி நவரத்ன பீடஸ்திதே ஸுஸ்திதே |
ரத்ன பத்மாஸனே ரத்ன ஸிம்ஹாஸனே ஸங்க பத்மயோபாஸ்ரிதே |
தத்ர விக்னேஷ துர்காவடுக்ஷேத்ரபாலைர்யுதே | மத்தமாதங்க கன்யா ஸமூஹான்விதே |
மஞ்ஜுளா மேனகாத்யங்க நாமானிதே, பைரவைரஷ்டபிர்வேஷ்டிதே |
தேவி வாமாதிபி:ஸக்திபி:ஸேவிதே |
தாத்ரி லக்ஷ்ம்யாதி சக்த்யஷ்டகை: ஸம்யுதே | மாத்ருகா மண்டலைர் மண்டிதே |
யக்ஷ கந்தர்வ ஸித்தாங்கநா மண்டலைரர்சிதே | பஞ்சபாணாத்மிகே |
பஞ்ச பாணேனே ரத்யா ச ஸம்பாவிதே |
(Victory to the Divine Mother) who is seated on the dais of pretty nine jewels, whose throne is of diamonds, who is served by the shamkha and padma nidhis, who is famous, who is accompanied by Ganesha, Durga, Vatu and Kshetrapala, who has the company of intoxicated matanga kanyas, who is surrounded by the eight bhairavas, who is honoured by Manjula, Menaka and other celestial damsels, who is served by saktis like Vama, eight saktis of Dhatri ,Lakshmi and others, who is worshipped by the seven mothers, yakshas, gandharvas and the siddhanganas, who is surrounded by bhairavies, who is the very soul of Kama, who is honoured by Kama and Rati and who is propitiated by Vasanta who enjoys her affection.
प्रीतिभाजा वसन्तेन चानन्दिते | भक्तिभाजं परं श्रेयसे | कल्पसे |
योगिनां मानसे द्योतसे छन्दसामोजसा भ्राजसे | गीतविद्या विनोदाति तृष्णेन कृष्णेन सम्पूज्यसे |
भक्तिमच्चेतसा वेधसा स्तूयसे | विश्वहृद्येन वाद्येन विद्याधरैर्गीयसे |
ப்ரீதிபாஜா வஸந்தேன சானந்திதே | பக்திபா⁴ஜம் பரம் ஶ்ரேயஸே | கல்பஸே |
யோகினாம் மானஸே த்யோதஸே | ச்சந்தஸா மோஜஸா ப்ராஜஸே |
கீத வித்யா விநோதாதி த்ருஷ்ணேன க்ருஷ்ணேன ஸம்பூஜ்யஸே |
பக்திமச்சேதஸா வேதஸா ஸ்தூயஸே | விஸ்வஹ்ருத்யேன வாத்யேன வித்யாதரைர்கீயஸே |
O Mother! You bless your devotees with material and spiritual welfare. You shine in the hearts of yogis. You shine by the powerful Vedic chants. You are worshipped by Krishna who very much likes gitavidya( the fine art of music). Brahma sings your praises with deep devotion. Vidyadharas sing your glories with instruments which captivate the hearts of all.
श्रवणहरदक्षिणक्वाणया वीणया किन्नरैर्गीयसे | यक्षगन्धर्वसिद्धाङ्गना मण्डलैरर्च्यसे |
सर्वसौभाग्यवाञ्छावतीभिर् वधूभिस्सुराणां समाराध्यसे |
ஸ்ரவண ஹரண தக்ஷிணக்வாணயா வீணயா கின்னரைர்கீயஸே |
யக்ஷ கந்தர்வ ஸித்தாங்கனா மண்டலைரர்ச்யஸே |
ஸர்வ ஸௌபாக்ய வாஞ்சாவதீ பிர்வதூபி: ஸுராணாம் ஸமாராத்யஸே |
Your glories are sung by Kinnaras by playing the melodious Veena which captivates the ears. You are worshipped by groups of yakshas, gandharvas and shiddhas. You are propitiated by the wives of devas who desire for themselves all the good things in life.
सर्वविद्या विशेषत्मकं चाटुगाथा समुच्चारणा कण्ठमूलोल्लसद्- वर्णराजित्रयं
कोमलश्याम लोदारपक्षद्वयं तुण्डशोभाति दूरीभवत् किंशुकं तं शुकं लालयन्ती परिक्रीडसे |
ஸர்வவித்யா விஷேஷாத்மகம் சாடுகாத்தா ஸமுச்சாரணம் கண்டமூலோல்ல ஸத்வர்ண ராஜித்ரயம்
கோமளஸ்யாம லோதார பக்ஷத்வயம் துண்டஸோபாதி தூரீபவத் கிம்சுகம் தம்சுகம் லாலயன்தீ பரிக்ரீடஸே |
You mollycoddle and play with the parrot which is the personification of all knowledge, which keeps telling interesting stories, which has on its neck three lines of different colours, which has two pretty dark green wings and whose beak surpasses the kimshuka flower in its red colour.
पाणिपद्मद्वयेनाक्षमालामपि स्फाटिकीं ज्ञानसारात्मकं var मालागुण
पुस्तकञ्चङ्कुशं पाशमाबिभ्रती तेन सञ्चिन्त्यसे तस्य वक्त्रान्तरात् गद्यपद्यात्मिका भारती निस्सरेत् |
येन वा यावकाभाकृतिर्भाव्यसे, तस्य वश्या भवन्ति स्त्रियः पूरुषाः | येन वा शातकम्बद्युतिर्भाव्यसे सोपि लक्ष्मीसहस्रैः परिक्रीडते |
பாணிபத்மத்வயேன அக்ஷமாலாமபி ஸ்பாடிகீம் ஞானஸாராத்மகம் புஸ்தகம் *சாங்குஸம் பாஸமாபிம்ப்ரதீ யேன ஸஞ்சின்த்யஸே தஸ்ய வக்த்ரான்தராத் கத்யபத்யாத்மிகா பாரதீ நி:ஸரேத் |
யேந வா யாகவா பாக்ருதிர் பாவ்யஸே தஸ்ய வஸ்யா பவந்தி ஸ்த்ரிய: புருஷ: |
யேந வா ஸாதகும்பத்யுதிர் பாவ்யஸே ஸோபி லக்ஷ்ம்ஹீ ஸஹஸ்ரை: பரிக்ரீடதே |
If a devotee meditates on you as holding in your hands the crystal akshamala, the book of supreme knowledge, the goad and the rope, from his mouth will emerge all knowledge in the form of poetry and prose. If he meditates on you as having a red complexion, all men and women will be under his spell. If he meditates on you as having golden complexion, he will sport with thousands of Lakshmis (i.e. he will have immeasurable wealth).
किन्न सिद्ध्येद्वपुः श्यामलं कोमलं चन्द्रचूडान्वितं तावकं ध्यायतः |
तस्य लीला सरोवारिधीः तस्य केलीवनं नन्दनं तस्य भद्रासनं भूतलं तस्य गीर्देवता किङ्करि तस्य चाज्ञाकरी श्री स्वयं |
கிம் ந ஸித்யதேத் வபு: ஸ்யாமளம் கோமளம் சந்த்ர சூடான்விதம் தாவகம் த்யாயத: |
தஸ்ய லீலா ஸரோவாரிதி: தஸ்ய கேலீவனம் நந்தனம் தஸ்ய பத்ராஸனம் பூதலம் தஸ்ய கீர்தேவதா கிங்கரீ தஸ்ய சா ஜ்ஞாகரீ ஸ்ரீ:ஸ்வயம் |
What is not accessible or achievable to the devotee who meditates on your beautiful dark blue form sporting the crescent moon on the head? For him the ocean is the pool for water sports, the Nandana vana is the forest where he can play, his seat is the entire earth, the Goddess of speech is his handmaid and Goddess Lakshmi waits for his orders.
सर्व तीर्थात्मिके सर्व मन्त्रात्मिके सर्व यन्त्रात्मिके सर्व तन्त्रात्मिके सर्व चक्रात्मिके सर्व शक्त्यात्मिके
सर्व पीठात्मिके सर्व वेदात्मिके सर्व विद्यात्मिके सर्व योगात्मिके सर्व वर्णात्मिके सर्वगीतात्मिके
सर्व नादात्मिके सर्व शब्दात्मिके सर्व विश्वात्मिके सर्व वर्गात्मिके सर्व सर्वात्मिके सर्वगे सर्व रूपे
जगन्मातृके पाहि मां पाहि मां पाहि मां देवि तुभ्यं नमो देवि तुभ्यं नमो देवि तुभ्यं नमो देवि तुभ्यं नमः
ஸர்வ தீர்தா²த்மிகே ஸர்வ மந்த்ராத்மிகே ஸர்வ யந்த்ராத்மிகே ஸர்வ தந்த்ராத்மிகே
ஸர்வ சக்ராத்மிகே ஸர்வ ஶக்த்யாத்மிகே ஸர்வ பீடா²த்மிகே ஸர்வ வேதா³த்மிகே
ஸர்வ வித்³யாத்மிகே ஸர்வ யோகா³த்மிகே ஸர்வ வர்ணாத்மிகே. ஸர்வ கீ³தாத்மிகே
ஸர்வ நாதா³த்மிகே ஸர்வ ஶப்³தா³த்மிகே ஸர்வ விஶ்வாத்மிகே ஸர்வ வர்கா³த்மிகே
ஸர்வ ஸர்வாத்மிகே ஸர்வகே³ ஸர்வ ரூபே
ஜக³ன்மாத்ருʼகே பாஹி மாம் பாஹி மாம் பாஹி மாம்
தே³வி துப்⁴யம் நமோ தே³வி துப்⁴யம் நமோ தே³வி துப்⁴யம் நமோ தே³வி துப்⁴யம் நம:
O Devi!, the soul or essence of all holy waters, all tantras, all mantras, all chakras (symbols), all psychic powers, all seats of power, all philosophy, all knowledge, all yogas, all musical sounds, all vedas, all speech, all worlds, all divisions and all austerities, who is everywhere, who is all forms, who is the Mother of all the worlds please save me, save me, I prostrate before you, I prostrate before you, I prostrate before you.
॥ इति श्यामला दण्डकम् सम्पूर्णम् ॥ இதி ஶ்யாமலா த³ண்ட³கம் ஸம்பூர்ணம் ॥
मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वर ।. यत्पूजितं मयादेव परिपूर्णं तदस्तु मे ॥
வேத மந்திரங்கள் சரியான ஸ்வரத்தோடு ஓதப்பட வேண்டும். தப்பான ஸ்வரத்தோடு ஓதினால் அது விபரீத பலனை அளிக்கும்.
மந்திரங்களை, தகுந்த குருவின் அறிவுரைப்படி பாராயணம் செய்யும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். எந்த மந்திரத்தை உபதேஸம் பெருகிறீர்களோ, அம்மந்திரம் உங்கள் குருவிற்கும் சித்தியாயிருக்க வேண்டும். இல்லையெனில், அந்த உபதேஸத்தால், உங்களுக்கும், உபதேஸித்தவருக்கும் இன்னலே விழையும்.
ஒரு மந்திரத்தை ஓதுங்கால், அக்ஷரப் பிழையோ, ஸ்வரத்தில் பிழையோ, வேறேனும் தவறோ ஏற்பட்டால், எஜமானனுக்கே தீங்கு விளைவிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக