பெண்கள் பல தியாகங்களை செய்து தான் ஒரு கருவை சுமக்கிறாள். மேலும் அப்படி கஷ்டப்பட்டு சுமக்கும் கரு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், பெண்கள் ஒருசில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இங்கு வயிற்றில் வளரும் சிசுவின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்க கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகள் படுக்கும் அறை கட்டாயம் மாடிப்படிகளுக்கு அடியில் இருக்கக் கூடாது. வாஸ்துவின் படி, இது அந்த அறையில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும். மேலும் கர்ப்பிணிகள் இடது பக்கமாக படுப்பது தான் நல்லது.
கர்ப்பிணிகள் சிவப்பு அல்லது கருப்பு போன்ற அடர் நிறத்தில் உள்ள உடைகளை உடுத்தக்கூடாது. கர்ப்ப காலத்தில் கண்களுக்கு குளிர்ச்சியை மற்றும் மென்மையைத் தரும் வெளிர் நிற உடைகளையே அணிய வேண்டும்.
கர்ப்பிணிகள் தென்கிழக்கு திசையை நோக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது. இது தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும்.
கர்ப்பிணிகளின் அறையில் புன்னகைத்தவாறான குழந்தைகளின் போட்டோக்களைத் தொங்க விட வேண்டும். இது கர்ப்ப காலத்தில் பெண்களின் மனநிலையை நிலையாக வைத்திருக்கும்.
வீட்டின் ஹோலில் மிகவும் கனமான பொருட்களை வைக்க வேண்டாம். ஏனென்றால், இது வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும்.
கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக மொபைல், லேப்டாப் போன்ற பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம். இதனால் அதிலிருந்து தீங்கு விளைவிக்கும் அதிர்வுகள் வெளிவரும் அல்லது கண்கள் மற்றும் மனதில் அழுத்தத்தை உண்டாக்கும்.
கர்ப்பிணிகள் வேலை செய்யும் அல்லது உறங்கும் அறையில் எப்போதும் போதுமான அளவு சூரியக்கதிர்கள் மற்றும் இயற்கை காற்று கிடைக்குமாறு இருக்க வேண்டும். மேலும் அறையின் சுவர்களில் அடர் நிற பெயிண்ட் இல்லாமல் வெளிர் நிற பெயிண்ட் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
இரவில் படுக்கும் முன் அல்லது தனியாக இருக்கும் நேரங்களில் புத்தகங்களைப் படியுங்கள். இதனால் மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
கர்ப்பிணிகள் தினமும் ஸ்ட்ரெட்ச்சிங் உடற்பயிற்சிகளை செய்துழ வந்தால், தசைகள் சற்று தளர்வடையும். இன்றைய காலத்தில் பிரசவத்திற்கு முன்னான யோகாக்கள் என்று சில உள்ளது. மருத்துவரின் பரிந்துரையின் பேரில், அவற்றை தினமும் செய்து வருவது மிகவும் நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக