இந்த பூண்டை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஆனால் அப்படி உள்ள பூண்டு சிலருக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?
பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன?
- கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் தங்களுடைய உணவில் பூண்டை எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அது கல்லீரல் பாதிப்புக்காக எடுத்துக் கொள்ளப்படும் மருந்தின் வீரியத்தைக் குறைக்கிறது.
- வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டிருக்கும் போது வெறும் பூண்டை அதிகம் எடுத்துக் கொள்ளக்கூடாது, ஏனெனில் பூண்டில் உள்ள பொருட்கள் பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.
- அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள், அதை செய்வதற்கும் இரண்டு வாரங்களுக்கு முன்பே பூண்டு சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
- குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் பூண்டை சாப்பிடக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக