இது பெரிய உடல்நல கோளாறு இல்லை எனிலும் கூட, குளிர் காலத்தில் சாதாரண வேலைகளை கூட செய்ய விடாமல் செய்யும். குளிர் காலத்தில் பெரும் சிக்கலாக இருக்கும் இந்த சளி, இருமல், தொண்டை கரகரப்பு, வயிறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஒரு இயற்கை மருந்து பற்றி இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்:
- 400 மில்லி வெந்நீர்.
- கருப்பு புள்ளி உள்ள பழுத்த வாழைப்பழம் இரண்டு.
- இரண்டு டேபிள்ஸ்பூன் தேன்.
செய்முறை #1
கரும்புள்ளி விழுந்த பழுத்த வாழைப்பழத்தை தோல் நீக்கி, மசிக்க வேண்டும். மசிக்கும் போது மரத்தாலான கரண்டியை பயன்படுத்துங்கள். இரும்பு வகையிலான கரண்டியை பயன்படுத்தும் போது பழம் சீக்கிரமாக கருமையாகிவிடும்.
செய்முறை #2
மசித்த வாழைப்பழத்தை ஒரு மண் பானையில் போடு வையிங்கள். அதில் வெந்நீரை சேர்க்கவும். இதை 30 நிமிடங்கள் விட்டுவிடவும்.
செய்முறை #3
வெந்நீரில் கலந்த மசித்த வாழைப்பழம் குளுமை அடைந்தவுடன், தேன் சேர்க்கவும். பிறகு நன்கு கலக்கவும். தேனை முன்கூட்டி சேர்த்துவிட வேண்டாம். மசித்த வாழைப்பழம் வெந்நீர் சூடாக இருக்கும் போது தேன் கலந்தால், தேனின் நற்குணங்கள் இழந்துவிடும்.
உட்கொள்ளும் முறை #1
நூறு மில்லி அளவில் ஒரு நாளுக்கு நான்கு முறை உட்கொள்ள வேண்டும். (ஒரு நாளுக்கு நானூறு மில்லி)
உட்கொள்ளும் முறை #2
ஒரு நாளுக்கு நானூறு மில்லி போதுமானது. தினமும் புதியதாக ஃப்ரெஷாக தயாரித்து உட்கொள்ள வேண்டும்.
உட்கொள்ளும் முறை #3
இதன் பலன் ஐந்து நாட்களில் தெரியவரும். இது முழுக்க முழுக்க இயற்கை மருந்து என்பதால் எந்தவிதமான பக்கவிளைவுகளும் உண்டாகாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக