தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 8 பிப்ரவரி, 2017

முழங்காலுக்கு கீழே இந்த இடத்தில் அழுத்துங்கள்: ஒரே ஒரு நிமிடம் மட்டும் தான்!

நமது உடம்பின் சில இடங்களில் மசாஜ் செய்து வந்தால் பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்கும்.
அந்த வகையில் நமது உள்ளங்கையால் முழங்காலை மூடிக்கொண்டு, மோதிர விரல் மற்றும் சுண்டுவிரலுக்கு இடைப்பட்ட பகுதியை அழுத்த வேண்டும்.
இவ்வாறு செய்வதால் நமக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது.
முழங்கால் முட்டின் கீழ் அழுத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்
  • நமது முழங்கால் மூட்டு பகுதிக்கு கீழ் அழுத்தம் கொடுப்பதால், சிறுநீரகம், பாலியல் உறுப்புகள், அட்ரீனல் சுரப்பில்கள் மற்றும் செரிமானம் போன்றவற்றின் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது.
  • முதுகு தண்டு அறுவை சிகிச்சையின் போது, இந்த பகுதியில் அழுத்தம் கொடுத்தால், அறுவைச் சிகிச்சையின் மூலம் ஏற்படும் முதுகு வலியைக் கட்டுப்படுத்துகிறது.
  • நமது உடம்பில் உள்ள குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை இயல்பான நிலைக்கு சீராக கட்டுப்படுத்தி, உயர் ரத்த அழுத்த பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.
  • நமது உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, சீரற்ற குடலியக்கத்தினால் ஏற்படும் வயிறு தொடர்பான செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • நாம் இந்த பகுதியில் சிறிது அழுத்தம் கொடுப்பதால், அதிக நம்பிக்கை ஏற்படுவதுடன், அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
  • முழங்காலில் மசாஜ் செய்யும் இந்த செயல்பாட்டினை, காலையில் எழுந்ததும் வட்ட சுழற்சி முறையில், 10 நிமிடம் செய்து வந்தால், விரைவில் நல்ல பலனைக் காணலாம்.
  • மதிய உணவு வேளைக்கு முன்பாக செய்தால், ஒருவித எரிச்சல், பதட்டம் போன்றவை நீங்கி, நமது மூளையின் வளர்ச்சி மற்றும் நினைவு திறனை அதிகரிக்கச் செய்கிறது.
  • இரவு நேரத்தில் தூங்க செல்வதற்கு முன் இந்த மசாஜை செய்யக் கூடாது. ஏனெனில் இதனால் இரவு நேரத்தில் ஏற்படும் தூக்கம் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
http://news.lankasri.com/health/03/119095?ref=lankasritop

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக