இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழச்சாறு ஆகியவற்றுடன் பபயத்தம் பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும். முகத்தில் பருக்கள் இருந்தால் வெள்ளைப் பூண்டையும், துத்தி இலையையும் சம அளவு எடுத்து அதை நறுக்கி, பின் நல்லெண்ணெயில் போட்டுக் நன்கு காய்ச்சி தினசரி பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால், விரைவில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்குரு வராமல், வெயிலில் கருத்துப் போகாமல் இருக்கும். |
28 Feb 2017 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1488277664&archive=&start_from=&ucat=1& |
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், 28 பிப்ரவரி, 2017
முகத்தில் உள்ள தழும்புகள் மறைய அருமையான இயற்கை மருந்து!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக