ஓட்டமாய் ஓடுவது தான் இன்றைய வாழ்க்கை முறை. எதற்கு இந்த ஓட்டம்? வெற்றியைத் தேடித்தான்!
படிப்பில் செண்டம், முதல் இடம், கேட்ட கோர்ஸ், கேம்பஸில் நல்ல வேலை, வாகனப் பிராப்தி, காதலில் சுபம், வீடு வாங்கியபின் கல்யாணம், வெளி நாட்டு வாய்ப்பு, சொத்து, பூரண ஆரோக்கியம், பிள்ளைகளால் சுகம்.. பிறகு பிள்ளைகளின் படிப்பு, வேலை, கல்யாணம்...இந்த ஓட்டம் தான் வாழ்க்கையா?
முதலில் வாழ்க்கையின் உண்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...
1. இந்த உலகத்தில் யாரும் உண்மையானவர்கள் அல்ல...உன்னை பெற்ற தாயை தவிர...
2. மக்கள் பணத்தை மதிக்கும் அளவிற்கு மனிதர்களை மதிப்பதில்லை.
3. நீங்கள் யாரை உயிராக நம்புகிறீர்களோ....அவர்களே உங்களை அதிகமாக காயப்படுத்துவார்கள்.!
4. நீங்கள் சந்தோஷத்தில் இசையை ரசிக்கவும், சோகத்தில் பாடலின் வரிகளை உணரவும் செய்வீர்கள்.
5. உங்களின் வாழ்க்கையை இரண்டு விதமாக வகைப்படுத்தலாம்.
அதாவது, எதுவும் உங்களிடத்தில் இல்லாத போது இருக்கும் ”உங்களின் பொறுமை”
அனைத்தும் உங்களிடத்தில் இருக்கும் பொழுது உங்களின் ”அணுகுமுறை”
6.மனிதர்கள் நல்ல எண்ணங்களை விரும்புவதில்லை, மாறாக நல்ல தோற்றத்தை மட்டுமே விரும்புவார்கள்.
- See more at: http://www.manithan.com/news/20170227125354#sthash.jf1bbUaj.dpuf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக