தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 22 பிப்ரவரி, 2017

ஒரே கோத்திரத்தில் ஏன் திருமணம் செய்யக் கூடாது தெரியுமா? காரணம் இது தான்

இந்து மதத்தில் வேறு ஜாதிகளில் திருமணம் செய்வதற்கு பெரும் எதிர்ப்பு இருப்பதை நாம் அறிவோம். இது பல சமயங்களில் கொடூரமான தாக்கத்தை மணமக்கள் இடையே ஏற்படுத்தியுள்ளதையும் நாம் செய்திகளில் பார்த்திருக்கிறோம்.
இதே போல ஒரே கோத்திரத்திலும் திருமணம் செய்வதை இந்து மதத்தில் தவிர்ப்பதை நாம் பரவலாக காண முடியும். வேறு ஜாதிகளில் திருமணம் செய்வதை கூட பலர் ஏற்பதை பார்க்கலாம். ஆனால், ஒரே கோத்திரத்தில் பிரிவில் திருமணம் செய்வதை ஏன் முந்தைய காலத்தில் இருந்து கடைப்பிடித்து வருகிறார்கள்? இதற்கான காரணம் என்ன? என்பது பற்றி இனி காணலாம்.
மூதாதையர் வழிதோன்றல்கள்
கோத்திரம் என்பது ஒரு நபரின் மூதாதையர் வழிதோன்றல்கள் ஆரம்பத்தில் இருந்து கடைப்பிடித்து வரப்படும் ஒன்றாக இருக்கிறது. இது ஆண்கள் வழியில் தான் பின்பற்றப்படுகிறது.
ஆண் வம்சாவளி
கோத்திரம் என்பது தந்தை மகன் வழியாக தான் பின்பற்றப்படும். தந்தை மகள் என்ற வழியில் பின்பற்றப்படுவது இல்லை. மகளுக்கு திருமணம் ஆனால், அவர் கணவன் கோத்திரத்தின் வழியில் சேர்ந்துவிடுவார்.
பிரிவுகள்
ஒவ்வொரு பிரிவினர் இடையேயும் பல உட்பிரிவுகள் இருக்கும். இவை மரத்தில் இருந்து கிளைகள் பிரிவது போன்றதாக பரவியுள்ளது. இந்த கோத்திரங்கள், பிரிவுகள் ஆனது நான்காம் நூற்றாண்டில் இருந்து பின்பற்றப்பட்டு வருவதை நாம் நூல்கள் மூலம் அறியப்படுகிறது.
ஒரே மகன்
இதற்காக தான் வம்சாவளி தடைப்பட்டு போய்விடக் கூடாது என்பதற்காக ஆண் மகன் வேண்டும் என அனைவரும் விரும்பியுள்ளனர்.
அறிவியல்
ஒரு மனிதனின் உடலில் 23 செட் குரோமோசோம் இருக்கும். அதில் தந்தையிடம் இருந்து, அன்னையிடம் இருந்து என மொத்தமாக 46 இருக்கும். இதில் ஒன்று தான் செக்ஸ் குரோமோசோம். எக்ஸ்.எக்ஸ் வந்தால் பெண், எக்ஸ்.ஒய் வந்தால் ஆண். இதில் ஒய் குரோமோசோம் தான் ஒருவரின் வம்சாவளியாக பின்பற்றிவரப்பட்டுள்ளது. இந்த வழிதோன்றல் இழந்துவிட கூடாது என்பதற்காக ஆண்களை வைத்து ஒரு வம்சம் அமைந்துள்ளது.
ஹார்மோன் தாக்கம்
அன்று ஒரே கோத்திரத்தில் பெண், எடுக்கவோ, கொடுக்கவோ கூடாது என்பதற்கான காரணம் எப்படியும் அவர்கள் நெருங்கிய இரத்த பந்தமாக இருப்பார்கள். இப்படிப்பட்ட திருமண காரணத்தால் ஹார்மோன் தாக்கம் ஏற்படும். அதனால் குழந்தையின் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும் என இதை பின்பற்றியுள்ளனர்.
இன்று
இடை வந்த ஜாதி, மத, கோத்திரங்கள் வேறுபாடு இடையே சென்று விடும். இன்று பெரும்பாலும் காதல் திருமணங்கள் தான் நடக்கின்றன. இதற்கு பெற்றோர் மத்தியிலும் பெரிய எதிர்ப்புகள் ஏதும் இல்லை.
அண்ணன் - தங்கை
ஒரே கோத்திரத்தில் பிறந்த ஆண், பெண் அண்ணன் - தங்கை உறவு முறையில் பார்க்கப்படுவதும் ஒரு காரணமாக திகழ்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக