வாழ்வியலில் நாம் எவ்வளவு முன்னேற்றம் கண்டாலும், எத்தனை அறிவியல் கண்டுப்பிடிப்புகள் புதியதாக வந்தாலும், அதிநவீன உபகரணங்களை பயன்படுத்த துவங்கினாலும் நமது ஆழ்மனதில் பதிந்த சில விஷயங்கள், குணாதிசயங்கள், இரத்தில் ஊறிப்போன சமாச்சாரங்களை யாராலும் மாற்ற முடியாது.
அந்த வகையில் இன்றளவும் ஆண்கள் பெண்களை பற்றி தவறாக எண்ணிக் கொண்டிருக்கும் விஷயங்கள் சில…
அழகா இருக்க!
ஒரு ஆண் பெண்ணின் அழகை பெற்றி விமர்சித்தால் ரசிப்புத்தன்மை. இதுவே, ஒரு பெண் ஆணின் அழகை பற்றி புகழ்ந்து பேசினால், அவளது கேரக்டரே விமர்சனத்திற்குள்ளாகும்.
நைட் ஷிப்ட்!
ஒரு ஆண் நைட் ஷிப்ட் சென்று வந்தால் கடின உழைப்பாளி, அது ஒரு பெண் சென்று வந்தால் அவள் மீது தவறான கருத்துக்கள் பச்சைக் குத்தப்படும்.
டிரஸ்!
அந்தந்த துறையில் வேலை செய்வது சார்ந்து தான் உடை அணியும் வழக்கம் உலகெங்கிலும் இருக்கிறது. ஆனால், நமது நாட்டில் மட்டும் ஒரு பெண்ணின் உடையை வைத்து அவரது குணாதிசயங்கள் விமர்சிக்கப்படுகிறது.
சகஜமாக பேசுவது!
ஆண் சகஜமாக பெண்ணிடம் பேசினால் அவர் தோழமை உணர்வுடன் பழகுகிறார். இதுவே, ஒரு பெண் பத்து ஆண்களுடன் தனியாக வெளியே சென்றாலோ, பேசினாலோ, சமூகத்தில் வாழும் அந்த நாலு பேர் தவறாக விமர்சனம் செய்வார்கள்.
ஃபேஸ்புக் போட்டோ!
ஃபேஸ்புக்கில் ஒரு பெண் தொடர்ந்து புகைப்படம் பதிவு செய்தால் கூட, அவரை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் ஆண்கள் இருக்க தான் செய்கிறார்கள்.
போன் பேசுவது
ஒரு பெண் அதிக நேரம் போனில் பேசினால் அது காதல், கீதலாக தான் இருக்கும் என்று தான் 90% ஆண்கள் எண்ணுகின்றனர்.
ஆதிக்கம்!
வீட்டில் கணவன் அறிவுரை கூறினால் அன்பு, பாசம், அக்கறை. இது மனைவி அறிவுரை கூறினால் ஆதிக்கம், அடக்கி ஆள நினைக்கிறாள் என்ற பேச்சு எதிரொலிக்கும். தப்பித்தவறி அதை அந்த கணவன் கேட்டு நடந்தால் பொண்டாட்டி தாசன் ஆகிவிடுவார்.
மேக்-அப்!
மேக்கப் செய்யும் பெண்கள் எல்லாம் தவறானவர்கள் என்ற எண்ணம் இன்றும் பல ஆண்கள் மத்தியில் இருக்கிறது.
செலவு!
பெண்கள் பத்து ரூபாய் செலவு செய்தால் கூட ஆடம்பரம், வீண் செலவு என்ற பேச்சுக்கள் எழும். இதுவே, ஆண்கள் நண்பர்களுக்கு செய்யும் செலவு காந்தி கணக்கில் வந்துவிடும்.
- See more at: http://www.manithan.com/news/20170216125100?ref=youmaylike2#sthash.1KtVAfj4.dpuf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக