தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 8 பிப்ரவரி, 2017

வல்வெட்டிதுறை குகை.......

மண்டபக்கிடங்கு/மண்டபக்காடு
தொண்டைமானாறு கெருடாவில் தெற்குப் பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்படும் குடியிருப்புக்களுக்கு மத்தியில் நிலமட்டத்திற்குக் கீழ் கரும் பாறைகளாலான ஒரு குகை ஒன்று காணப்படுகிறது.முன்னொரு காலத்தில் இந்தக் குகை வழியாக கிட்டத்தட்ட 1 k.m தூரத்தில் உள்ள சின்னமலைக் கடற்கரையை அடையலாம் என்பது ஐதீகம்.ஆனால் இப்போதோ அதன் வாசல்கள் கல்லாலும் மண்ணாலும் அடைபட்டுக் கிடக்கின்றன.இந்தக் குகையில் உள்ள கற்பாறைகளும் சின்னமலைக் கடற்கரைப் பகுதியில் காணப்படும் கற்பாறைகளும் ஒத்த தன்மையைக் கொண்டிருப்பதானது ஒரு காலத்தில் இரண்டு பகுதிகளையும் இணைக்கும் பாதாள வழி இருந்திருக்கலாம் என்ற எண்ணத்தை வலுப் படுத்துவதாக அமைகிறது.

இந்த அமைவிடத்திற்கு ஒரு வரலாற்றுப் பெருமை வாய்ந்த கதை இருக்கிறது.யாழ்ப்பாணத்தின் கடைசி இராசதானியாக வாழ்ந்த சங்கிலியன் எனப்படும் மன்னன் தனது எதிரிகளான ஆங்கிலேயரிடமிருந்து தப்புவதற்காக இக்குகையையும் இதனூடான சின்னமலைக் கடற்கரை வரையுமான பாதாள வழியையும் அமைத்துக் கொண்டிருந்தான் என்பதே அது.அந்தக் காலத்தில் அரசர்கள் தம் போரில் தோற்கும்போது மறைந்து வாழ்வதற்கு ஒரு குகையையும்,கடல் மார்க்கமாகத் தப்பிச் செல்வதற்கு ஒரு பாதாள வழியையும் அமைத்துக் கொள்வதை வழக்கமாக் கொண்டிருந்தார்கள்.இந்த வழக்கமானது முள்ளிவாய்க்கால் நந்திக் கடல் வரை சென்றிருப்பதை சில உறுதிப்படுத்தப்படாத சில கதைகள் மூலம் அறியக் கூடியதாக இருக்கிறது.
இதன் நில மட்டத்திலிருந்து குகையின் திறந்த மண்டபப் பகுதியை அடைவதற்கான வாசல் மிகக் குறுகியதாக இருந்த போதிலும்,சாகச எண்ணம் கொண்ட சிறுவர்களாலும் இளைஞர்களாலும் இந்த வாசல் பாவிக்கப் படுவதுண்டு.
இதைச் சுற்றிய பகுதிகளில் ஏனையோரின் காணிகளில் திருட்டுத்தனமாக கற்களை அபகரிக்கும் வழக்கம் தொடர்ந்து கொண்டே செல்கிறது.கழுதை அறியுமா கற்பூர வாசனை என்பது போல் இந்த இடத்தின் வரலாற்றுப் பெருமை அறியாத சிலர் மண்டபக்கிடங்குப் பகுதியில் கற்களைத் தோண்டி எடுப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.
யாழ்ப்பாணத்தின் தமிழரின் பெருமையை உலகறியச் செய்யும் சின்னங்களை வேறு நபர்கள் உரிமை கொண்டாடும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்லும் இக்காலப் பகுதியில்,மண்டபக் கிடங்கானது யாராவது ஒரு சிங்கள மன்னனின் guest house ஆகப் பாவிக்கப் பட்டது என்று தென் பகுதியிலிருந்து யாரும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சொல்லிக் கொண்டு வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக