தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 6 பிப்ரவரி, 2017

இஞ்சி டீ குடிங்க: 5 மணிநேரத்தில்.................

இஞ்சி உணவின் மணத்தை அதிகரிப்பதோடு மட்டுமின்றி உடல்நலத்திற்கும் மிக நல்லது. அன்றாட உணவில் இஞ்சியை சேர்த்து வந்ததால் உடலில் பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.
இஞ்சியை நாம் பலவாறு உட்கொள்ள முடியும். அதில் இஞ்சி ஜூஸ், இஞ்சி டீ போன்றவைகளும் அடங்கும்.
மேலும் இங்கு மசாலா இஞ்சி டீ குறித்தும், அதைக் குடித்த 5 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் கொடுக்கப்பட்டுள்ளன.
3 கிராம் இஞ்சியை உட்கொண்டால், உடலினுள் பல அற்புதங்கள் ஏற்படும். குறிப்பாக இஞ்சியை உட்கொண்ட 3 மணிநேரத்திலேயே, இஞ்சி உடலினுள் அதன் வேலையைக் காட்டிக் கொண்டிருப்பதை உணரக்கூடும்.
இஞ்சியை உட்கொண்ட பின், வயிற்றில் ஒருவித எரிச்சலுணர்வை சந்திக்கக்கூடும். ஏனெனில் இஞ்சி வயிற்றில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றி சுத்தம் செய்து கொண்டிருப்பதால் தான் இது போன்ற எரிச்சலுணர்வு ஏற்படுகிறது.
அடுத்த 2 மணிநேரத்தில், இதுவரை உடலில் இருந்த ஒருவித அழுத்தம் வெளியேற்றப்பட்டு, உடல் லேசானது போன்ற உணர்வைப் பெறக்கூடும்.
இஞ்சியை அடிக்கடி டீ அல்லது ஜூஸ் வடிவில் எடுத்து வந்தால், அனைத்து வகையான புற்றுநோய்களின் தாக்கம் தடுக்கப்படும்.
மேலும் இது உடலின் வெப்பநிலையை அதிகரிப்பதால், கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
முக்கியமாக பெண்கள் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் தசைப்பிடிப்பு பிரச்சனைகள் அகலும். மேலும் குமட்டல், தலைச்சுற்றல் பிரச்சனைகளும் நீங்கும்
மசாலா இஞ்சி டீ தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்
  • இஞ்சி- 1 சிறிய துண்டு
  • எலுமிச்சை- 1
  • பட்டை- 2 துண்டுகள்
  • புதினா இலைகள்- சிறிது
  • தண்ணீர்- தேவையான அளவு
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் இஞ்சி, பட்டை, புதினா போன்றவற்றை போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, பின் வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக