தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

பிரித்தானியாவில் சிறந்த விருது பெற்ற இலங்கை பெண்!

பிரித்தானியாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் இலங்கையை சேர்ந்த பெண் இயக்குநர் ஒருவர் விருது பெற்றுள்ளார்.
கடந்த வாரம் லண்டனில் நடைபெற்ற 70வது பெப்டா (British academy of film and art) திரைப்பட விருது விழாவில், சிறந்த குறு அனிமேஷன் திரைப்படத்திற்காக விருது வழங்கப்பட்டுள்ளது.
அனுஷ்கா கிஷானி நாணயக்கார என்ற இலங்கை பெண்ணினால் இயக்கப்பட்ட A LOVE STORY என்ற குறுந்திரைப்படத்திற்கு விருது கிடைத்துள்ளது.
விமான பொறியியலாளராக பிரித்தானியாவில் பணியாற்றும் ரத்நாயக்க மற்றும் அமிதா ரத்நாயக்கவின் கடைசி மகளான கிஷானி, தனது ஆரம்ப கல்வியை பிரித்தானியாவில் கற்றுள்ள நிலையில் சாதாரண தர கல்வியை மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தில் கற்றுள்ளார்.
ஆங்கில தின போட்டியில் அகில இலங்கை ரீதியில் பல வெற்றிகளை அந்த பாடசாலைக்காக அவர் பெற்றக் கொடுத்துள்ளார்.
சிறு வயது முதல் கலை துறையில் விசேட திறமையை வெளிப்படுத்தி அவர் தனது உயர் கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் லண்டன் கல்லூரியில் தனது முதலாவது பட்டத்தை பெற்றுள்ளார்.
அதன் பின்னர் பெக்கன்பீல்ட் நகரத்தில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பாடசாலையில் கல்வியை ஆரம்பித்த அவர் திரைப்பட இயக்குனர் தொடர்பான கற்கையை நிறைவு செய்த பின்னர் அவர் இயக்கிய இந்த திரைப்படம் பல்வேறு நாடுகளில் பல்வேறு விருதுகளை வென்றுள்ளது.
BAFTA விருது விழாவில் பரிந்துரை செய்யப்பட்ட அவரது திரைப்படம் முதலாவது இடத்தை பெற்றுள்ளமை இலங்கைக்கு கிடைத்த பெருமையாக கருதப்படுகிறது.
http://www.tamilwin.com/entertainment/01/136298

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக