தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 18 பிப்ரவரி, 2017

உலகின் எட்டாவது கண்டம் கண்டுபிடிப்பு

உலகின் எட்டாவது கண்டம் நியூசிலாந்து நாட்டின் அருகில் இருப்பதாக தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
உலகத்தில் இது நாள்வரை ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அன்டார்க்டிக்கா, ஐரோப்பா மற்றும் ஆத்திரேலியா என மொத்தம் 7 கண்டங்கள் தான் இருந்து வருகின்றன.
கண்டங்கள் சம்மந்தமாக தொடர் ஆராய்சியில் ஈடுப்பட்டு வந்த நியூசிலாந்து நாட்டை சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர்கள் உலகின் 8 ஆவது கண்டம் நியூஸிலாந்துக்கு அருகில் இருப்பதாக தற்போது கண்டறிந்துள்ளனர்.
ஸீலான்டியா என அழைக்கப்படும் அந்தக் கண்டத்தின் ஒரு சிறிய பகுதி மட்டும் நியூஸிலாந்துக்கு அருகில் கடலுக்கு மேலாக வெளித் தோன்றிய நிலையில் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்த கண்டத்தின் பரப்பளவு 5 மில்லியன் சதுர கிலோமீட்டர் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக