தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 4 ஜூலை, 2015

சிறுநீரைப் பெருக்கும் பீர்க்கங்காய்

சளிக்கோளாறுகள், பித்தவாதம் போன்றவைக்கு பீர்க்கங்காய் நல்ல தீர்வு தருகிறது.
பீர்க்கங்காயை சாம்பாரில் சேர்தோ அல்லது பொறியல் செய்து சாப்பிட்டால் சகல நோய்களும் குணமாகும்.
100 கிராம் பீர்க்கங்காயில் உள்ள சத்துக்கள்
புரதம் 0.5%
கால்சியம் 40 மி.கிராம்,
பாஸ்பரஸ் 40 மி. கிராம்,
இரும்புச் சத்து 1.6 மி.கிராம்
வைட்டமின் ‘ஏ’
ரிஃபோபிளவின் 0.01 மி.கிராம்,
தயாமின் 0.07 மி. கிராம்,
நிகோடின் அமிலம் 0.2 மி.கிராம்,
மருத்துவ பயன்கள்
பீர்க்கங்காயில் நன்மை தரும் நார்ச்சத்து, வைட்டமின் சி, ரைபோபிளேவின், துத்தநாக சத்து, இரும்பு சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் ரத்தத்தை சுத்திகரிக்கிறது.
ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது. பீர்க்கங்காயில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் பார்வைக்கு ஊட்டம் தரும்.
பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும். மேலும் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும். வயிற்று தொந்தரவுகளை நீக்குவதுடன், எளிதில் ஜீரணமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும்.
இதன் இலைச் சாறு பித்தத்தை போக்குவது மட்டுமின்றி ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும்.
சொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் ஆகியவை குணமாகப் பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம்.
கசப்புச் சுவை அதிகமாய் இருப்பதால் இதைச் சமைத்து சாப்பிடுவதன் மூலம் தோல் நோய்கள் வராமல் இருக்கும்.
மேலும் இதன் இலைகளை அரைத்துப் புண்கள் உள்ள இடங்களில் கட்டினால் போதும். சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது.
குறிப்பு
காய்கறிகளுள் பச்சையாகச் சாப்பிடக் கூடாத காய்கறி இதுதான். கசப்புச் சுவை அதிகமாய் இருப்பதால் இதைக் சமைத்துத்தான் சாப்பிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக