அடிக்கடி தலைசுற்றலால் அவதிப்படுபவர்கள் இயற்கை வைத்தியங்களை மேற்கொள்வது நல்லது.
கொத்தமல்லி விதை (தனியா) பச்சையாக ஒன்றிரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும்.
காலையில் வெறும் வயிற்றில் இந்த உடைத்த தனியாவை ஒரு கை அள்ளி, கொதித்த வெந்நீரில் போட்டு மூடி வைக்கவும்.
தேவையானால் சிறிது நேரம் கொதிக்க வைக்கலாம். பிறகு வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து அருந்தலாம். இதனால் உடலில் கெட்ட நீர் பிரிந்து ரத்தம் சுத்தமாகும்.
கொத்தமல்லி கசகசா பருத்தி விதை இம்மூன்றையும் சம அளவு எடுத்து தூள் செய்து இரண்டு பங்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்து காலை மாலை வெறும் வயிற்றில் ஒரு சிட்டிகை போட்டு வென்னீரில் கலந்து குடிக்க, தலைச்சுற்று, கிறுகிறுப்பு நீங்கும்.
அடிக்கடி தலைசுற்றல் இருந்தால் ரத்த அழுத்தம் இருப்பதாக அர்த்தம். முற்றிய இஞ்சியை நசுக்கிப் பிழிந்து சாறு எடுத்து அத்துடன் சிறிது தேன் கலந்து சாப்பிடுங்கள். தலைச்சுற்றல் நிற்கும்.
வெண்தாமரைப்பூவின் இதழ்களைத் தூளாக்கி காப்பி டிக்காசனைப்போல் தயாரித்து பாலில் ஊற்றிச் சாப்பிட்டால் தலைச்சுற்றல், கிறுகிறுப்பு, குணமாகும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக