தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 4 ஜூலை, 2015

மருத்துவ உதவி இல்லாமல் தானே உடலில் சிப்பை பொருத்திய முதல் மாணவன்

பிரித்தானிய வாலிபர் ஒருவர் தனது கையில் அரிசி அளவுக்கு ஒரு சிப்பை நுழைத்து சாதனை படைத்துள்ளார்.
பிரயன் வேக் (Bryon Wake) என்ற 15 வயது மாணவர், பயோ-ஹேக்கராகி இருக்கிறார்.
அதாவது, அவர் தனது உடலில், அரிசி அளவுக்கு ஒரு சிப்பை நுழைத்துக்கொண்டிருக்கிறார்.
இந்த சிப் மூலம் அவரால் தனது ஸ்மார்ட் போனைக் கையசைவாலேயே இயக்க முடியும்.
மேலும், அதன் மூலம்,. ப்ளூடூத் சாதனங்களையும் இயக்கலாம். இன்னும் பல விடயங்களை இந்த சிப் மூலம் செய்ய முடியும்.
இப்படி உடம்புக்குள் சிப்பைப் பொருத்திக்கொள்பவர்களை சைபோர்க் அல்லது பயோ-ஹேக்கர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றனர்.
அமெரிக்க நிறுவனம் ஒன்று இந்த வகை சிப்களை இணையம் மூலம் விற்பனை செய்துவருகிறது.
அந்த நிறுவனத்தில்தான் வாலிபர் வேக், சிப்பை வாங்கி ஊசி மூலம் பொருத்திக்கொண்டிருக்கிறார்.
இந்த சிப்பைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று நிறுவனம் தெரிவித்தாலும் மருத்துவ உதவி இல்லாமல் இதை உடம்புக்குள் செலுத்திக்கொள்ளக் கூடாது எனக் குறிப்பிடுகிறது.
ஆனால் வேக் அந்த எச்சரிக்கை பற்றிக் கவலைப்படாமல் தானாகவே அதைப் பொருத்திக்கொண்டுள்ளார்.
உலகம் முழுவதும் 10,000 பேர் உடலுக்குள் சிப்பைப் பொருத்திக்கொண்டிருப்பதாகக் கூறப்பட்டாலும் இந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கும் முதல் மாணவராக வேக் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக