தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 9 ஜனவரி, 2015

நலமான வாழ்க்கைக்கு காய், கனிகள்!

அன்றாடம் உணவில் காய் மற்றும் கனிகளை சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.
அன்னாசி பழம்
இப்பழம் ரத்தத்தை சுத்திகரிக்கும். குடல் புண் குணமாகும், புதிய ரத்தத்தையும் உற்பத்தி செய்கிறது.
புடலங்காய்
புடலங்காய் தொடர்ந்து சாப்பிட்டால் கண் பார்வை கூர்மையாகும். கண்ணுக்கு குளிர்ச்சியை தரும்.
அத்திக்காய்
உடற்சூட்டை தணிக்கும், பித்தத்தை போக்கும். பல்லில் தோன்றும் பூச்சிகளை அழிக்கும்.
கருணைக்கிழங்கு
எல்லாவித மூல நோய்களையும் கட்டுப்படுத்தும். சூடு தணியும்.
அவரைக்காய்
இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. வாய் நாற்றம் போக்கும். ஜீரண சக்தியை அளிக்கும்.
ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் தேகம் சிவப்பாகவும், மினுமினுப்பாகவும் மெருகேறும். உடல் வலுபெறும்.
கேரட்
கேரட் அதிகமாக சாப்பிட்டால் வைட்டமின் ஏ கிடைக்கும், வாழ்நாள் முழுவதும் கண்களுக்கு கண்ணாடி போடாமல் இருக்க கேரட் அதிகமாக சாப்பிடவேண்டும்.
உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கேரட்டிற்கு உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக