தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியினால் இன்று பல்வேறு புதிய சாதனங்கள் மற்றும் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றின் தொடர்ச்சியாக ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டேப்லட்களின் உதவியுடன் தொலைவில் இருந்தவாறே வீட்டினை கண்காணிக்கக்கூடிய முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை Elgato நிறுவனம் CES நிகழ்வின்போது அறிமுகம் செய்துள்ளது.
இந்த முறைமையின் ஊடாக சென்சார்களின் மூலம் வெப்பநிலை, பயன்படுத்தப்படும் சக்தியின் அளவு, வளியின் தரம் போன்றவற்றினையும் அளவிட முடியும்.
இவை தவிர வீட்டில் பூட்டப்படாத கதவுகள், அணைக்கப்படாத மின்விளக்குகள் போன்றவற்றினையும் தானாகவே செயல்பட வைக்க முடியும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக