QR code (Quick Response) உலக அளவில் வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது.
பலரும் இந்த வாக்கியத்தை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். இது எதற்காக? இதனால் என்ன பயன்?
தவல்களை விரைந்து பெறுவதற்காக தொழில் அமைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு முத்திரை தான் இந்த QR Code. இது முதன்முதலில் ஜப்பானில் உள்ள ஒரு வாகனத்துறை சார்ந்த நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்டது.
ஒரு பொருளின் தகவல்கள் அனைத்தும் ஒரு மிஷின் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஆப்டிகல் லேபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கும். இதன் மூலம் அந்த பொருளின் தகவல்கள் அனைத்தும் எளிதில் புரிந்து கொள்ளப்படுகிறது.
இந்த தகவல்கள் அனைத்தும் numeric, alphanumeric, byte / binary, and kanji என்ற Encoding முறை மூலம் பதிவு செய்யப்படுகிறது. இதன் காரணமாக தயாரிப்பு நிறுவனத்தில் பொருட்கள் கண்காணிப்பு, அடையாளம் காணுதல், நேரத்தை கண்காணித்தல், ஆவணங்களை முறைப்படுத்துதல் மற்றும் மார்க்கெட்டிங் என அனைத்து வேலையும் எளிதாக முடிகிறது.
QR Code அமைப்பு டென்ஸோ வேவ் என்பவரால் 1994ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் வாகன தயாரிப்புகளை கண்காணிக்க பெரிதும் உதவிய இந்த அமைப்பு, தற்போது வணிக கண்காணிப்பு முதல் பல வசதிக்காகவும் மொபைல் போன்களிலே வந்து விட்டது.
ஸ்மார்ட் போன் இந்த வகையில் ஸ்கேன்னர் ஆக பயன்படுகிறது. இது பின்னிப் பிணைந்த அந்த குறீயீட்டில் இருந்து தகவலை எளிதாக பெற உதவுகிறது.
கடந்த 2011ம் ஆண்டு யூன் மாதத்தில் தனது மொபைல் போன்களில் QR Code அமைப்பை பயன்படுத்துபவர் எண்ணிக்கை 14 மில்லியனை தொட்டது.
இதில் 58% பேர் வீட்டில் இருந்தும், 53% மக்கள் கடைகளில் இருந்தும் பயன்படுத்த தொடங்கினர். இந்த 14 மில்லியன் மக்களில் 53% பேர் 18 வயது முதல் 34 வயது வரை உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக தென் கொரியா, அர்ஜென்டினா என தொடங்கி இப்போது உலக அளவில் உள்ள பெரிய கடைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக