தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 5 டிசம்பர், 2014

உடல் எடையை குறைக்க போறீங்களா? அப்போ இதெல்லாம் செய்யாதீங்க!

இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைப்பதற்காக அல்லல்படும் நபர்கள் ஏராளம்.
துரித உணவுகள், எண்ணைய் பண்டங்களை சாப்பிட்டு உடல் பெருத்துவிட்டு, பிறகு வருத்தப்படுகின்றனர்.
ஆனால் சரியாக உடற்பயிற்சி செய்பவர்கள் சில நேரங்கள் உணர்ச்சிவசப்பட்டு செய்யும் சில தவறுகளால் பக்கவிளைவுகளை சந்திக்கின்றனர்.
காய்கறிகளை ஒதுக்குவது
உடல் எடையைக் குறைக்கவுள்ளவர்கள், காய்கறிகளின் பக்கம் தலை வைத்துக் கூடப்படுப்பதில்லை.
எடைக் குறைப்பின் போது, காய்கறிகள் தான் நம் உடலில் ஒரு சமநிலையை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.
மேலும் பல காய்கறிகளில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், எடைக் குறைப்பிற்கு அவை பெரிதும் உதவுகின்றன.
காலை உணவை தவிர்ப்பது
எடை குறைப்பாத நினைத்து கொண்டு காலை உணவை சிலர் தவிர்ப்பதுண்டு.
இதனால் உடலின் மெட்டபாலிசம் நன்றாகக் குறைந்துவிடும், எனவே காலை உணவை தவிர்ப்பது நல்லதல்ல.
குறைந்த நேர தூக்கம்
ஒவ்வொரு மனிதனும் சாதாரணமாக ஒரு நாளுக்குக் குறைந்தது ஆறு மணிநேரம் தூங்கியே ஆக வேண்டும்.
தலை முதல் காலை வரை அனைத்து உறுப்புகளுக்கும் இந்த ஆறு மணிநேர ஓய்வு என்பது அவசியம்.
இதைச் சரியாகக் கடைப்பிடிக்கவில்லை என்றால், உடல் எடைக் குறைப்பிற்கான பல விடயங்கள் அடிபடும்.
வெவ்வேறு பயிற்சிகள்
எடைக் குறைப்பிற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, தினமும் ஒரே விதமான உடற்பயிற்சிகளை செய்தால் உங்கள் எடையும் அப்படியே தான் இருக்கும்.
இதில் முன்னேற்றம் ஏற்பட ஏற்பட, புதிய பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.
குடிமகனாய் இருக்ககூடாது
அளவுக்கு அதிகமாக மது அருந்துவதும் உடல் எடைக் குறைப்பில் ஈடுபட்டிருப்போரைக் கடுமையாகப் பாதிக்கும்.
ஏனெனில் உடலின் மெட்டபாலிசமும் மோசமாகப் பாதிக்கப்படும். இதனால் அதிகமாக குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக