நமது அன்றாட வாழ்வில் பொக்கிஷமான பைல்களை எந்தவித கம்பி இணைப்பும் இல்லாமல் இணைக்கும் பணியை புளுடூத் வசதி நமக்கு அளித்து வருகிறது.
இப்போது உள்ள காலக்கட்டங்களில் கணனி முதல் கையில் பயன்படுத்தும் மொபைல் போன் வரை இந்த வசதியை நாம் பயன்படுத்துகிறோம்.
பயன்கள்
நாம் மூக்கை மூடிய படியே சாப்பாட்டு வகைகளை கண்டுபிடிப்பது போலவே புளுடூத் இயக்கப்பட்ட சாதனங்கள் அவற்றின் எல்லைகளுக்குள் இருக்கையில் யாரும் இயக்காமலேயே ஒன்றையொன்று புரிந்து கொள்கின்றன.
இதன் பயன்பாடு மட்டும் பற்றி அறியும் நமக்கு இது எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி தெரிவதில்லை.
அதில் எந்த வித தவறும் இல்லை, நம் பயன்பாடுக்கு மட்டும் பயன்படுவதை கற்றுவைத்துக் கொண்டால் போதும் சிலர் நினைப்பதுண்டு.
புளுடூத் என்பது முக்கியமாக குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தி குறைவான எல்லைக்குள்ளான(ஆற்றல் வகையைப் பொறுத்து: 1 மீற்றர், 10 மீற்றர், 100 மீற்றர்) தகவல்தொடர்புக்காக உருவாக்கப்பட்ட ஒரு தரநிலையாகும்.
இது பயன்படுத்தப்படும் இரு சாதனங்களிலும் உள்ளமைக்கப்பட்டுள்ள குறைந்த விலை ட்ரான்சீவர் மைக்ரோசிப்களை அடிப்படையாகக் கொண்டது.
புளுடூத் உதவியால் இந்த சாதனங்கள் குறிப்பிட்ட தூர வரம்புக்குள் இருக்கும் போது அவை ஒன்றையொன்று தொடர்புகொள்ள முடியும்.
இந்தச் சாதனங்கள் ரேடியோ(அலைபரப்பு) தகவல் தொடர்பைப் பயன்படுத்துவதால் அவை ஒன்றுக்கொன்று தெரியும் படியோ அல்லது ஒன்றுக்கொன்று நேராகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
வேலை செய்யும் விதம்
கைப்பேசிகள், தொலைபேசிகள், மடிக்கணனிகள், தனிநபர் கணனிகள், அச்சுப்பொறிகள், உலகளாவிய வழிச்செலுத்தல் முறைமை(GPS) ஏற்பிகள், டிஜிட்டல் கேமராக்கள் மற்றும் வீடியோ கேம் தொடர்பு முனையங்கள் போன்ற சாதனங்கள் ஒன்றுக்கொன்று இணையவும் தகவல் பரிமாறிக் கொள்ளவும் புளுடூத் உதவுகிறது.
புளுடூத்தில் அதிர்வெண்- துள்ளல் பரப்புக் கற்றை எனப்படும் ரேடியோ தொழில்நுட்பம் தகவலை பரப்ப பயன்படுத்தப்படுகிறது.
இந்தத் தொழில்நுட்பம் அனுப்பப்படும் தரவை பல துண்டுகளாக்கி அவற்றின் தொகுப்பை 79 வரையிலான அதிர்வெண்களின் மேல் வைத்து அனுப்புகிறது.
அதன் அடிப்படைப் பயன்முறையில் காஸியன் அதிர்வெண்- மாற்றப்பண்பேற்ற முறை(Gaussian frequency-shift keying) பயன்படுத்தப்படுகிறது. அதன் அதிகபட்ச தரவு வீதம் 1 Mb/s என்ற வகையில் உள்ளது.
இந்த முறையில் பாதுகாப்பான உலகளாவியதொழிநுட்பத்தில்,(ISM) 2.4 GHz குறை வரம்பு ரேடியோ அதிர்வெண் கற்றையகலம்(short-range radio frequency bandwidth) பயன்படுத்தப்படுகிறது.
இதற்கு புளுடூத் சிறப்பார்வக் குழு(Special Interest Group) (SIG) புளுடூத் குறிப்பு விவரங்களை உருவாக்கி உரிமம் வழங்குகிறது.
புளுடூத் சிறப்பார்வக் குழு தொலைத்தொடர்பு, கணினி, நெட்வொர்க்கிங் மற்றும் நுகர்வோர் மின்னணுத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களைக் கொண்டதாக உள்ளது.
இரு புளுடூத் இணைப்பை பெர்சனல் ஏரியா நெட்வொர்க் எனக் கூறலாம். ஆங்கிலத்தில் இந்த நெட்வொர்க்கை PAN அல்லது piconet என அழைக்கின்றனர்.
இரண்டிற்கு இடையே ஏற்படும் இந்த நெட்வொர்க் அதே அறையில் மற்ற இரண்டிற்கு இடையே ஏற்படும் நெட்வொர்க்கால் பாதிக்கப்படாத முறையில் இது இயங்குகிறது.
|
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 16 ஜூன், 2014
புளுடூத்தின் செயல்பாடு!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக