தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 12 ஜூன், 2014

நொடியில் சமைக்கலாம்- பிரெட் க்ரிஸ்பிஸ்!

பரபரப்பா உலகமே ஓடிக்கொண்டிருக்கும் போது, நிதானமா சமைச்சு ரசித்து ருசித்து சாப்பிடுறது என்பது மறந்தே போச்சுங்க.
எனவே சீக்கிரமா சமைக்கக்கூடிய ரெசிபிகளை உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம்.
நொடியில் சமைக்கலாம்- பிரெட் க்ரிஸ்பிஸ்
தேவையான பொருட்கள்
பிரெட் ஸ்லைஸ் - 10,
வெங்காயம் - 2,
தக்காளி - 3,
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
கடுகு, பெருஞ்சீரகம் - தலா கால் டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை
பிரெட் ஸ்லைஸ்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, பிரெட் துண்டுகளை வறுத்து எடுத்து, தனியே வைக்கவும்.
பின்னர் வாணலியில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருஞ்சீரகம் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறி.
அதில் அரை கப் தண்ணீர் ஊற்றிச் சூடாக்கவும். ஒரு கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள பிரெட் துண்டுகள், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கிளறி, இறக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக