இந்து மதத்தில் குறிப்பிடப்படும் காக்கும் கடவுளான திருமாலால்ஆளப்படுவதாகும். மேலும் இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறார்.
“அட்சய” என்பதற்கு சமஸ்கிருத மொழியில் என்றும் குறைவில்லாத என்று ஒரு பொருள் இருக்கிறது. இந்த நாள் ஒருவருக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் தரும்.
இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது
அட்சய திரிதியை மே மாதம் 2-ம் தேதி, அதாவது வரும் வெள்ளிக்கிழமை இந்த ஆண்டு வருகிறது. அட்சய திரிதியில் குறைந்த பட்சமாக அரை கிராம் தங்கம் வாங்கினால் கூட, இனி வரும் காலங்களில் நம்மால் நிறைய வாங்க முடியும் என்பது ஒரு நம்பிக்கை.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2000-ம் ஆண்டின் ஆரம்பத்தில்தான் அட்சய திரிதியை பற்றி பரவலாக பேச்சு ஆரம்பித்து அதி விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது நகை வியாபாரிகளின் ஒரு வகையான வியாபார யுக்தி என்றே சொல்லலாம்.
அட்சய திரிதியை நாளில் எந்த ஒரு செயலை செய்வதற்கு உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. இதற்கும் தங்கம் வாங்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
மேலும் பல செய்திகளை படிக்க இணையவும்...
https://www.facebook.com/pages/SMS-360º/602743786482859
https://www.facebook.com/pages/SMS-360º/602743786482859
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக