பண்டைய காலங்களில் சித்தர்கள், மலைகளிலும், காடுகளிலும் குகை களில், ஆசிரமங்களில் தவம் செய்து வாழ்ந்து வரும் போது இரவு நேரங்களில் விளக்கு,வெளிச்சம் தேவைப்படும் போது மூலிகைகளைப் பயன்படுத்தி விளக்கு எரித்துள்ளனர்.
ஜீவஜோதி மூலிகை என்னும் ஒரு அபூர்வ மூலிகையினை பறித்து ஆமணக்கு விதைகளை பாறைகளில் வைத்து கற்களைக் கொண்டு இடித்து நசுக்கும் போது அதிலிருந்து எண்ணை கசியும்.அதில் ஜீவஜோதி மூலிகையை தோய்த்து எரிக்க அதுபஞ்சு திரி போல் அழகாக எரிந்து இரவு முழுதும் வெளிச்சம் கொடுக்கும்.இம் மூலிகையின் வாசனையினால் எந்த ஒரு விஷ ஜந்துக்களும் அருகில் வராது.
இதன் செயல் விளக்கம் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள சஞ்சீவி மலையின்ஒரு பகுதியான சிறுமலையில் அகத்தியர் பெருமான் தனது சீடர் தேரையர் உடன் தவம் செய்த புனித தலமான வெள்ளிமலையில் அகத்தியர் வனத்தில் பதிவு செய்தது.
இந்த வீடியோ பதிவில் அகத்தியர் பெருமான் தனது சீடர் தேரையரு டன் தவம் செய்யும் [நிஷ்ட்டையில் அமர்ந்த] திருக் கோலத்தில் காட்சியளிக்கின்றார்.
அன்று சித்தர்களின் பயன்பாட்டில் இருந்த அந்த அதிசய மூலிகை விளக்காக எரியும் செயல் விளக்கம் நமது சித்தர் பிரபஞ்சம் இணைய தளத்தில் காணொளியாக உங்கள் பார்வைக்கு...
ஜீவஜோதி மூலிகை என்னும் இந்த அபூர்வ மூலிகையினை வீடுகளிலும், கடைகளிலும், வியாபார நிறுவனங்களிலும் காலை,மாலையில் அரைமணி நேரம் விளக்காக எரித்துவர கிரக தோஷம், வாஸ்து தோஷம், எதிரிகளின் கண்பார்வை, திருஷ்டி,ஏவல் ,பில்லி, சூன்யம் போன்றவை நீங்கி குடும்ப விருத்தி,தொழில் விருத்தி உண்டாகும்.
நன்றி !
இமயகிரி சித்தர்...
Siddhar Vedha Gurukulam – Trichy – T.N – INDIA
cell : 9865430235 - 8695455549
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக